ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பார்லி அல்லது கினோவா... எடை குறைப்புக்கு எது சிறந்தது..? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்

பார்லி அல்லது கினோவா... எடை குறைப்புக்கு எது சிறந்தது..? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்

பார்லி , கினோவா

பார்லி , கினோவா

எடை இழப்பிற்காக டயட் மேற்கொள்ளும் பலருக்கும் பார்லி மற்றும் கினோவா பற்றி தெரியாமல் இருக்காது. ஆனால் இந்த இரண்டில் சிறந்த எடை இழப்புக்கு எது உதவுகிறது என்பது பற்றி தெரியாமல் இருக்கலாம்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கூடுதல் உடல் எடை கொண்ட பலர் தங்கள் எடை இழப்பு இலக்குகளை அடைய விலையுயர்ந்த உணவுகள் அடங்கிய டயட் முறைகளை பின்பற்றுகின்றனர். விலை உயர்ந்த உணவுகள் மற்றும் சில உணவுகளை டயட்டில் இருந்து முற்றிலும் நீக்குவது உள்ளிட்டவை தவிர நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் அறிவுரை.

பெரும்பாலான மக்கள் எடை இழப்பிற்கான டயட்டிற்காக ஆரோக்கிய மாற்றுகளை தேடுகிறார்கள். ஆரோக்கியமான எடை இழப்புக்கு, சமச்சீரான உணவை உட்கொள்வதன் மூலம் மிதமான கலோரி பற்றாக்குறையில் இருக்க வேண்டும் என்று இன்ஸ்டாவில் குறிப்பிட்டு உள்ளார் உணவியல் நிபுணர் நிஹாரிக்கா புத்வானி. கோதுமை போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விட அதிக ஊட்டச்சத்துக்கள் காரணமாக முழு தானியங்கள் சிறந்ததாக கருதப்படுகிறது.

எடை இழப்பிற்காக டயட் மேற்கொள்ளும் பலருக்கும் பார்லி மற்றும் கினோவா பற்றி தெரியாமல் இருக்காது. ஆனால் இந்த இரண்டில் சிறந்த எடை இழப்புக்கு எது உதவுகிறது என்பது பற்றி தெரியாமல் இருக்கலாம்..

இதனிடையே உணவியல் நிபுணர் நிஹாரிக்கா புத்வானி தனது இன்ஸ்டாவில் மேற்கண்ட 2 முழு தானியங்களில் எது எடை குறைப்பிற்கு சிறந்தது என்ற கேள்விக்கான பதிலில் "பார்லி மற்றும் கினோவா ஆகிய இந்த 2 தானியங்களுமே உடல் எடையை குறைக்க உதவும். ஆனால் இங்கே நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், "உடல் எடையை குறைக்க நீங்கள் அறிமுகமில்லாத உணவுகளை சாப்பிட வேண்டியதில்லை" என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் மேக்ரோ ஊட்டச்சத்துக்களை பொறுத்த வரை இரண்டிற்கிடையிலும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை என்றாலும், "விலையில் பெரிய வித்தியாசம் உள்ளது". ஆரோக்கியமான எடை இழப்புக்கு, சமச்சீர் உணவை உட்கொள்வதன் மூலம் மிதமான கலோரி பற்றாக்குறையுடன் இருப்பது முக்கியம் என்றும் அவர் கூறினார். அவர் ஷேர் செய்துள்ள வீடியோவில் குறிப்பிட்டப்பட்டிருக்கும் விவரங்களை கீழே பார்க்கலாம்...


கினோவா:

30 கிராம் கினோவாவில் 96 கலோரி, 16 கிராம் கார்போஹைட்ரேட், 3.9 கிராம் புரோட்டீன், 1.6 கிராம் கொழுப்பு, 4.3 கிராம் ஃபைபர் இருக்கிறது. 250 கிராம் கினோவாவின் விலை சுமார் ரூ.150 ஆகும்.

சாரா அலி கான் செய்யும் ஒர்க் அவுட் வீடியோ.. இதை பார்த்தால் உங்களுக்கே உற்சாகம் கிடைக்கும்..!

பார்லி:

30 கிராம் பார்லியில் 94 கலோரி, 18 கிராம் கார்போஹைட்ரேட், 3.2 கிராம் புரோட்டீன், 0.3 கிராம் கொழுப்பு, 4.5 கிராம் ஃபைபர் இருக்கிறது. 250 கிராம் பார்லியின் விலை சுமார் ரூ.35 மட்டுமே.

30 கிராம் பார்லி மற்றும் 30 கிராம் கினோவா ஆகிய 2 தானியங்களிலும் ஒரே மாதிரியான நார்ச்சத்து, கார்ப்ஸ், புரதம் மற்றும் கொழுப்பு கலவை உள்ளது.

பார்லியை பயன்படுத்தும் வழிகள்:

* சூப்பில் சேர்க்கலாம்

* சாலட்டில் சேர்க்கலாம்

* மாவு செய்து ரொட்டி தயார் செய்யலாம்

* கிச்சடியில் சேர்க்கலாம்

கினோவாவை பயன்படுத்தும் வழிகள்:

*கிச்சடி அல்லது உப்புமாவில் சேர்க்கலாம்

* சாலட் அல்லது சூப்பில் சேர்க்கலாம்

* கினோவா புலாவ் செய்து சாப்பிடலாம்

First published:

Tags: Quinoa, Weight loss