Home /News /lifestyle /

கொளுத்தும் கோடையில் சில்லென்ற கரும்பு ஜூஸ் : தினமும் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

கொளுத்தும் கோடையில் சில்லென்ற கரும்பு ஜூஸ் : தினமும் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

கரும்பு ஜூஸ்

கரும்பு ஜூஸ்

கரும்புச்சாறு சுவையான மற்றும் வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான பானம் மட்டுமல்ல, இதில் இரும்புச் சத்து, எலக்ட்ரோலைட் முதல் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் வரை எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

கோடை காலத்திலேயே பிரத்தியேகமாக விளையும் பல விதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன. வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி, மாம்பழம் என்று கோடைக்காலத்தில் அதிகமாக விளையக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் வெப்பத்தைத் தணிப்பதற்கான நீர் சத்தும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்து இருக்கும். குளிர் காலத்திலேயே அறுவடை செய்யப்படும் கரும்பு, கோடை வெயிலின் தாக்கத்தை குறைப்பதில் பெருமளவில் உதவுகிறது.

வெப்பம் அதிகமான நாட்களில் எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் பத்தாது, எனவே தாகம் தீர்ப்பதற்கு தண்ணீர் தவிர இயற்கையான பானங்களை பலரும் விரும்புகின்றனர். அதில் இளநீருக்கு அடுத்து மிகவும் பிரபலமாக இருப்பது கரும்புச்சாறு. எலுமிச்சை இஞ்சி சேர்த்து செய்யப்படும் கரும்புச்சாறு ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் குடித்தாலே வெய்யிலின் வெப்பமும் புழுக்கமும் தணிந்துவிடும்.

கரும்புச்சாறு சுவையான மற்றும் வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான பானம் மட்டுமல்ல, இதில் இரும்புச் சத்து, எலக்ட்ரோலைட் முதல் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் வரை எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

எந்த விதமான பாட்டிலில் அல்லது பேக்கட்டில் வரும் பான வகைகளும், கண்முன்னே ஃபிரெஷ்ஷாகத் தயரிக்கப்படும் கரும்பு ஜூசுக்கு ஈடாகாது. கரும்பு சாறு எவ்வளவு ஆரோக்கியமானது என்று இங்கே பார்க்கலாம்.



 

இன்ஸ்டன்ட் ஆற்றல் மற்றும் எலக்ட்ரோலைட் பேலன்ஸ் :

நீங்கள் சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ உணர்ந்தால் உங்களுக்கு உடனடியாக ஆற்றில் கிடைப்பதற்கு நீங்கள் கரும்பு ஜூஸ் குடிக்கலாம். இதில் இயற்கையான இனிப்பு உள்ளது, இரும்புச்சத்து உள்ளது மற்றும் உடனடி ஆற்றல் கொடுக்கும். அதுமட்டுமின்றி கரும்புச்சாறு நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கும். இதில் எலெக்ட்ரோலைட் உள்ளது. கோடை தீவிரமான நீர் சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகமாக தாகம் எடுத்தாலோ அல்லது உடலில் நீர்வறட்சி இருப்பது போல் நீங்கள் உணர்ந்தாலோ, தினமும் கரும்பு ஜூஸ் குடிக்கலாம்.

கோடைக்காலத்தில் பொதுவாக ஏற்படக்கூடிய நோய்களும்... அறிகுறிகளும் : தவிர்க்க செய்ய வேண்டியவை..!

உடலில் இருக்கு தேவையற்ற நீரை வெளியேற்றும் :

டியூரெட்டிக் என்று கூறப்படும் தன்மை கரும்புச்சாறில் உள்ளது. அதாவது உடலில் உள்ள அதிகமான நீர் மற்றும் உப்பை, சிறுநீர் வெளியாக வெளியேற்றும். இதனால் வெயில் காலத்தில் உடலில் நீர் கடுப்பு ஏற்படாமலும், தொற்று எற்படாமாலும் இருக்கும்.



சரும ஆரோக்கியத்துக்கு ஏற்றது :

கரும்பு ஜூஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது உடலில் இருக்கும் ஆக்ஸிடேஷன் ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து, செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இதனால் முதுமையடையும் அறிகுறிகள் தடுக்கப்பட்டு, சரும ஆரோக்கியம் அதிகரிக்கும்.

இதைத்தவிர்த்து கரும்புச்சாற்றில் மக்னீசியம், இரும்புசத்து போன்ற மற்ற மினரல்கள் இருப்பதால் இது ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய உதவும். அதுமட்டுமின்றி உடலில் ரத்த மற்றும் ஆக்சிஜன் ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும். தற்போதைய சூழலில், பல இடங்களில் கரும்புச்சாறு வண்டிகள் இருக்கின்றன. எனவே, எளிதாக மற்றும் மலிவு விலையில் கிடைக்கும் இயற்கையான பானம் கரும்பு ஜூஸ் பருகி வெயிலின் தாக்கத்தை குறைக்கலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Sugarcane Juice

அடுத்த செய்தி