அசத்தல் சுவையில் 'பஞ்சாபி சிக்கன் மசாலா’... நீங்க ட்ரை பண்ணி இருக்கீங்களா?

சிக்கன்

பஞ்சாபி ரெசிபிக்கள் பெரும்பாலும் காரமாகவும், சுவையானதாகவும் இருக்கும்.

  • Share this:
பஞ்சாபி ரெசிபிக்கள் பெரும்பாலும் காரமாகவும், சுவையானதாகவும் இருக்கும். அதிலும் சிக்கன் ரெசிபிக்களை பற்றி சொல்லவே வேண்டாம். சுவை ஆள மயக்கும். அதிலும் பட்டர் சிக்கன், பாட்டியாலா சிக்கன், கடாய் சிக்கன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அந்த வகையில் இப்போது பஞ்சாபி ஸ்டைல் சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று இந்த பதிவில் நாம் காண்போம். இந்த டிஷ் உண்மையில் மிகவும் எளிமையானது. மேலும் இது மழைக் காலங்களில் வீட்டில் செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த பஞ்சாபி சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்..

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 500 கிராம்
வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் - 4
பட்டை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் (விருப்பமான எண்ணெய்)
தண்ணீர் - தேவையான அளவு

ஸ்பெஷல் பஞ்சாபி கரம் மசாலாவிற்கு...

மல்லி - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பட்டை - 1
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 2செய்முறை:

முதலில் கரம் மசாலாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும், மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கன் துண்டுகளை நீரில் நன்கு கழுவி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும். இப்போது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை ஸ்லோவாக வைத்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். கலவையானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி விட்டு, 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பின் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 20 நிமிடம் மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்கு வெந்ததும், அதனை இறக்கி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறினால், சூப்பரான பஞ்சாபி சிக்கன் மசாலா ரெடி.

 
Published by:Sivaranjani E
First published: