• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பரங்கிக்காய் புளிக் குழம்பு : மதிய உணவுக்கு அசத்தலா இருக்கும்..!

பரங்கிக்காய் புளிக் குழம்பு : மதிய உணவுக்கு அசத்தலா இருக்கும்..!

பரங்கிக்காய் புளிக் குழம்பு

பரங்கிக்காய் புளிக் குழம்பு

இப்படி செய்து பாருங்கள்..மதிய உணவுக்கு விருந்தாக இருக்கும்.

  • Share this:
    வெள்ளை சாதத்திற்கு புளிக்குழம்பு அவ்வளவு சுவை மிகுந்ததாக இருக்கும். அதுவும் சுவையாக செய்துவிட்டால் அன்றைக்கு விருந்துதான். அந்த வகையில் பரங்கிக்காய் போட்டு புளிக்குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பரங்கிக்காய் - அரை பாதி
    சின்ன வெங்காயம் - 6
    தக்காளி - 1
    பூண்டு - 5 பற்கள்
    புளி - எலுமிச்சை அளவு
    குழம்பு மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    சாம்பார் பொடு - 1/2 ஸ்பூன்
    உப்பு - தே.அ
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    கடுகு - 1/2 ஸ்பூன்
    வெந்தயம் - 1/4 ஸ்பூன்
    சீரகம் - 1/4 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    புளியை ஊற வைத்து தண்ணீரை கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.

    பின் கறிவேப்பிலை , பூண்டு , வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெண்டைக்காய் புளித்தொக்கு : இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியாக இருக்கும்..!

    வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு தக்காளி குழைந்ததும் மிளகாய் பொடி, சாம்பார் பொடி சேர்க்கவும்.

    அடுத்ததாக புளித்தண்ணீர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு 10 நிமிடங்கள் பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு இறக்கினால் பரங்கிக்காய் புளிக்குழம்பு தயார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: