கோவில் பிரசாதங்களில் புளியோதரைக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. சுட சுட , நெய் மணக்க மணக்க இருக்கும் புளியோதரை கண்டிப்பாக இன்னொரு முறை வாங்கி சாப்பிடலாம் என்று தான் பலரும் நினைப்பார்கள். சிலர், தயங்காமல் போய் வரிசையில் நின்று வாங்கியும் சாப்பிடுவார்கள். வீடுகளில் செய்யும் புளியோதரை கூட கோவிலில் தரும் சுவையில் இருந்தால் வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் கூட மிச்சம் வைக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு புளியோதரை பிரியர்கள் நம் ஊரில் அதிகம். அதுமட்டுமில்லை லஞ்ச் பாக்ஸ் ஈஸி ரெசிபியாகவும் இந்த புளியோதரை உள்ளது.
பொடியை மட்டும் அரைத்து வைத்துக் கொண்டால் போதும், வெறும் 5 நிமிடத்தில் டிபன் பாக்ஸில் கட்டி விடலாம். குழந்தைகளுக்கும் பிடித்தமான லஞ்ச் பாக்ஸாக இந்த கோயில் புளியோதரை இருக்கும். இந்த புளியோதரை பொடியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்காலம். இந்த ரெசிபி டுடேஸ் சமையல் யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் இருந்து இப்போது செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க.. கேரட் , முட்டைகோஸ் இருந்தால் போதும்.. இப்படியொரு பொரியலை நீங்க சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க…
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய், புளி, கடுகு, சீரகம், மிளகு, வேர்க்கடலை, கறிவேப்பிலை , வெந்தயம், நல்லெண்ணெய்.
செய்முறை:
1. முதலில் அடுப்பில் கடாய் வைத்து, அதில் கடலைப்பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், வெந்தயம், தனியா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க.. சைவ முட்டை பொரியல்.. ஒருமுறை செய்து பாருங்கள் கட்டாயம் பிடிக்கும்!
2. பின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, புளியை வறுத்துக் கொள்ள வேண்டு. அதே போல் கறிவேப்பிலையையும் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. இப்போது மிக்ஸியில் புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
4. இவற்றுடன், வறுத்து வைத்துள்ள பருப்புகள், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து பொடியாக்கி கொள்ள வேண்டும். அவ்வளவு தான் இப்போது கோவில் புளியோதரைக்கு தேவையான பவுடர் ரெடி.
5. அடுத்தது ,கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கடலை பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் அரைத்த பவுடரை தேவைக்கேற்ப சேர்த்து, வேக வைத்துள்ள சாதத்தில் போட்டு பிசைந்து கட்டினால் சூப்பரான கோவில் புளியோதரை தயார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.