எந்தெந்த காய்கறிகளில் புரதச்சத்து அதிகமாக உள்ளது ..? தெரிஞ்சிக்கோங்க..

காட்சி படம்

புரதச்சத்து அதிகமாக உள்ள காய்கறிகள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

 • Share this:
  உடலின் ஊட்டச்சத்து வலுபெறவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் புரதச்சத்து அவசியம். ஆனால் அவை அசைவத்தில் தான் நிறைவாக உள்ளது என சிலர் நினைக்கின்றனர். உண்மையில் காய்கறிகள் மூலமாகவும் புரதச்சத்தை போதுமான அளவு பெறலாம். அந்த காய்கறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

  தாவரம் சார்ந்த புரதம் :தாவரம் சார்ந்த உணவுகளான பச்சை பட்டாணி, புரக்கோலி, கீரை போன்றவற்றில் புரதச்சத்து முழுமையாக இல்லை என்றாலும் தொடர்ந்து சாப்பிடுவதால் போதுமான புரதச்சத்தை பெற முடியும் என்கின்றனர். அதோடு அமினோ ஆசிட் இருப்பதால் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும்.

  உருளைக்கிழங்கு : சிறிய அளவிலான உருளைக்கிழங்குகளில் மூன்று கிராம் அளவிற்கு புரதச்சத்து உள்ளது. அதோடு பொட்டாசியம், விட்டமின் சிய, நார்ச்சத்து நிறைவாக உள்ளது.

  காலிஃப்ளவர் : காலிப்ஃளவரில் 25 கிராம் புரதச்சத்து கிடைக்கிறது. கலோரி குறைவானது என்பதால் பயமின்றி சாப்பிடலாம். அதோடு இதன் மூலம் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஐயர்ன் போன்ற சத்துக்களையும் பெறலாம்.

  காளான் : காளான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமன்றி புரதச்சத்துக்கும் ஏற்ற உணவு. 100 கிராம் காளானில் 4 கிராம் புரதச்சத்து அடங்கியுள்ளது.

  Also read : வீட்டிலேயே மொறு மொறு ஹோட்டல் ரோஸ்ட் தோசை வேணுமா ? அரிசி மாவுடன் இதை மட்டும் சேர்த்தால் போதும்..

  பசலைக்கீரை : பசலைக்கீரை புரதச்சத்து நிறைந்தது. எனவேதான் இது சைவப்பிரியர்களின் விருப்ப உணவாக உள்ளது. 00 கிராம் பசலைக்கீரையில் 2.9 கிராம் புரதச்சத்து உள்ளது. அதோடு விட்டமின் சி, ஃபோலிக் ஆசிட் மற்றும் விட்டமின் பி ஆகிய சத்துக்களும் உள்ளன.

  மக்காச்சோளம் : மக்காசோளம் பலருக்கும் விருப்பமான உணவு. 100 கிராம் மக்காச்சோளத்தில் 3.2 கிராம் புரதச்சத்து உள்ளது. அதோடு நார்ச்சத்து நிறைந்த உணவு.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: