ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

விலைக்கொடுத்து வாங்கப்படும் நோய்... பதப்படுத்தப்பட்ட உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து - ஆய்வில் எச்சரிக்கை..!

விலைக்கொடுத்து வாங்கப்படும் நோய்... பதப்படுத்தப்பட்ட உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து - ஆய்வில் எச்சரிக்கை..!

பதப்படுத்தப்பட்ட உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து

பதப்படுத்தப்பட்ட உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பல நாடுகளில் இதுப்போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு உள்ள இயந்திர உலகத்தில் யாருக்குமே சமைப்பதற்குக்கூட நேரமில்லை. ஒருவேளை சமைத்தாலும் சந்தைகளில் விற்பனை செய்யக்கூடிய இன்ஸ்டன்ட் உணவுகள் அதாவது பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி சமைக்கின்றோம்.

நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்ற பெயரில் பல உடல் நலப் பிரச்சனைகளையும் நாம் விலைக்கெடுத்து வாங்குகிறோம். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறித்த எச்சரிக்கைப் பதிவுகள் வருவது இது முதல் முறை அல்ல. பல முறை விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தும் இன்னமும் நாம் இந்த முறையை மாற்றவில்லை.

இந்த சூழலில் தான், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தேசிய ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் சுமார் 10 ஆயிரம் நபர்கள் பங்கேற்றனர். ஓராண்டு காலம் நடத்திய ஆய்வில், மேற்கத்திய நாடுகள் உடல் பருமன் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர் எனவும், அதே சமயம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட வளரும் நாடுகளில் உடல் பருமன் அதிகரிப்பதற்கு ஊட்டசத்து குறைபாடுள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பல நாடுகளில் இதுப்போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சமீபத்தில் நடத்திய ஆய்வின் படி, மக்கள் தொகையின் சராசரி ஆற்றல் உட்கொள்ளலில் புரதம் 18.4 சதவீதம் மட்டுமே உள்ளது எனவும் கார்போஹைட்ரேட் 43.5% மற்றும் கொழுப்பு 30.9% ஆ உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் ஃபைபர் அதாவது நார்ச்சத்து மொத்த சராசரி ஆற்றல் உட்கொள்ளலில் 2.2% மட்டுமே உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Also Read : உடல் எடையை இப்படி ருசியான 5 உணவு மூலம் கூட குறைக்கலாம்..!

எனவே உடலுக்குத் தேவையான புரதம் தேவைப்படுவதால் நாம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ள நேரிடுவதால் உடல் பருமன் அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக முதல் நாள் உணவில் குறைவான புரதத்தை உட்கொண்டவர்கள், பின்வரும் உணவில், ஒட்டுமொத்த உணவு உட்கொள்ளும் அளவை அதிகரிப்பதையும் விஞ்ஞானிகள் கவனித்தனர். இதோடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே தான், காலை உணவில் புரதத்தின் பங்கு மிகவும் அவசியம் எனவும், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதும் கண்டறியப்பட்டது. குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஆய்வின் படி 2050 ஆம் ஆண்டில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தேவை அதிகரிக்கும் சூழல் ஏற்படும். இருந்தப் போதும் உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற உணவுகளில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

முன்னதாக பல நாடுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், காய்கறிகள், பழங்கள், குளிர்பானங்கள் போன்றவற்றால் மக்கள் பல்வேறு உடல் நலப்பாதிப்புகளைச் சந்தித்தனர். அந்த நேரத்தில் நடத்தப்பட்ட ஆய்விலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன் பிரச்சனை உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Processed Food, Side effects