ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ப்ரீபயாடிக்ஸ் நிறைந்த உணவுகள் பற்றி தெரியுமா..? இது நம் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு முக்கியமானது..?

ப்ரீபயாடிக்ஸ் நிறைந்த உணவுகள் பற்றி தெரியுமா..? இது நம் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு முக்கியமானது..?

ப்ரீபயாடிக்ஸ்

ப்ரீபயாடிக்ஸ்

நமது அன்றாட உணவுகளில் ப்ரீபயாடிக்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலமாக எண்ணற்ற அளவில் பலன்கள் கிடைக்கும். இப்போதெல்லாம் ப்ரீபயாடிக்ஸ் சாக்கலேட், மில்க் ஷேக் மற்றும் பவுடர் போன்றவை விற்பனைக்கு வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் உடல் ஆரோக்கியத்திற்கு ப்ரீபயாடிக்ஸ் சத்து மிக முக்கியமானதாகும். முதன் முதலில் கடந்த 1995ஆம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இதனை கண்டறிவதற்கு முன்பாகவே 1950களில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில், குழந்தைகளுக்கு தாய்மார்கள் ஊட்டுகின்ற தாய்ப்பாலில் பைஃபைடூபாக்டீரியா என்னும் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் இருப்பதாக தெரிவித்தனர்.

இதேபோல, நம் குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பாக்டீரியாக்களை பெற்றிடும் வகையில் நமது முன்னோர்கள் பால் சார்ந்த உற்பத்தி பொருட்களை அதிகம் உட்கொண்டனர் என்று பழங்கால குறிப்புகள் தெரிவிக்கின்றன. எல்லாவற்றையும் விட ஒரு மனித உயிருக்கு முதன்முதலில் தாய்ப்பாலில் இருந்து தான் ப்ரீபயாடிக்ஸ் கிடைக்கிறது.

ப்ரீபயாடிக்ஸ் என்றால் என்ன?

இது செரிமானம் ஆகாத உணவு மூலப் பொருட்களை கொண்டதாகும். இதில், குடல் நலனுக்கு தேவையான பாக்டீரியா உள்ளது. நல்ல ப்ரீபயாடிக்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலமாக சிறப்பான பலன்களை நாம் பெற முடியும். ப்ரீபயாடிக்ஸ் மற்றும் புரோபயாடிக்ஸ் ஆகிய இரண்டுமே நுண்ணுயிர்களை கொண்ட, நம் உடல் நலனுக்கு தேவையான சத்து பொருட்கள் ஆகும்.

ப்ரீபயாடிக்ஸ் எதில் கிடைக்கும்?

பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பருப்புகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றில் ப்ரீபயாடிக்ஸ் நிறைந்து காணப்படுகின்றது. இவற்றை பிஸ்கட், பருப்பு, சாக்கலேட் மற்றும் பால் உற்பத்தி பொருட்கள் வாயிலாக உட்கொள்ள முடியும். சிறு குடல் மற்றும் பெருங்குடல் பகுதியில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு இவை உணவாகப் பயன்படுகிறது.

பலன்கள் : 

மனிதர்களின் குடல் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுண்ணுயிர் வகைகள் உள்ளன. மேலும் பல கோடிக்கணக்கிலான நுண்ணுயிரிகள் உள்ளன. பெரும்பாலான நுண்ணுயிர்கள் பாக்டீரியா ஆகும். இதுதான் நம் உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

எப்படி வேலை செய்கிறது?

வயிறு மற்றும் மலக்குடல் பகுதியில் உள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை மேம்படுத்துவதற்கு ப்ரீபயாடிக்ஸ் உதவிகரமாக இருக்கிறது. நம் உடலின் பிஹெச் அளவுகளை சீராக வைத்திருப்பதற்கு உதவியாக உள்ளது. இதனால் வயிறு உப்புசம் தவிர்க்கப்படுவதுடன் பசி உணர்வு சீராக இருக்கும்.

ப்ரீபயாடிக்ஸ் முக்கியத்துவம்

நமது அன்றாட உணவுகளில் ப்ரீபயாடிக்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலமாக எண்ணற்ற அளவில் பலன்கள் கிடைக்கும். இப்போதெல்லாம் ப்ரீபயாடிக்ஸ் சாக்கலேட், மில்க் ஷேக் மற்றும் பவுடர் போன்றவை விற்பனைக்கு வருகின்றன. ஆகவே, இவற்றை நேரடியாக உட்கொள்வதன் மூலமாக சிறப்பான பலன்களை பெறலாம்.

Also Read : புரோபயோடிக் உணவுகள் பெண்ணுறுப்பு தொற்று அபாயங்களை தடுக்கிறது - ஆய்வு

என்றென்றும் அவசியமானது : 

நம் உடல் நலன் சிறப்பாக அமைய குடல் நலன் மிக முக்கியமானது ஆகும். ஆகவே, ப்ரீபயாடிக்ஸ் அடங்கிய உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியா மற்றும் கெட்ட பாக்டீரியா ஆகியவற்றை சமநிலைப்படுத்தி, ஆரொக்கியத்தை இது தக்க வைக்கும்.

First published:

Tags: Health tips, Probiotics