• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கல்யாண வீட்டு உருளைகிழங்கு பால் கறி ரெசிபி!

கல்யாண வீட்டு உருளைகிழங்கு பால் கறி ரெசிபி!

உருளைகிழங்கில் கல்யாண வீட்டில் செய்வது போல பால் கறி செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க....

  • Share this:
உருளைகிழங்கு வைத்து வறுவல், பொரியல், கிரேவி என செய்து சாபிட்டுருப்பீங்க... பால் கறி போல வைத்து சாப்பிட்டுருக்கீங்களா... வாங்க எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசித்தது)

சிறிய வெங்காயம் - 1 கப்

தக்காளி - 1

சீரகம் - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 1/2 கப்

உப்பு - தே.அ

எண்ணைய் - 5 டீஸ்பூன்

தாளிக்க

கடுகு - சிறிதளவு

உளுத்தம்பருப்பு - சிறிதளவு

கறிவேப்பிலை - 1 இனுக்கு



செய்முறை

வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தளித்து கறிவேப்பிலை போடவும். பின் வெங்காயம் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி தக்காளியை சேர்க்கவும். 3 நிமிடத்திற்குப் பிறகு உப்பு , உருளைக்கிழங்கை சேர்க்கவும். சீரகம் ,சோம்பு ,தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்த மசாலாவை ஊற்றி வேக வைக்கவும். மீதி உள்ள எண்ணையை சேர்க்கவும். 2 நிமிடம் சிம்மில் வைத்து சமைக்கவும். இப்போது உருளை கிழங்கு பால் கறி ரெடி.

மேலும் படிக்க... வெஜிடபிள் வெள்ளை குருமா செய்ய ரெசிபி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: