• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தைகளுக்கு விருப்பமான உருளைகிழங்கு ஆம்லெட்

குழந்தைகளுக்கு விருப்பமான உருளைகிழங்கு ஆம்லெட்

உருளைகிழங்கு ஆம்லெட்

உருளைகிழங்கு ஆம்லெட்

பொதுவாக பலரும் முட்டையை பொடிமாசாகவோ, அவிச்ச முட்டையாகவோ, ஆஃப் பாயிலாகவோ, கலக்கியாகவோ, அல்லது ஆம்லெட் ஆக செய்து உண்பது வழக்கம். ஆனால் நாம் முட்டையுடன் உருளைக்கிழங்கை சேர்த்து உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  • Share this:
குழந்தைகளுக்கு வித்தியாசமான முறையில் ஆம்லெட் செய்து கொடுக்கவிரும்பினால் உருளைக்கிழங்கு சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம் வாங்க... 

தேவையான பொருட்கள்

முட்டை - 5

உருளைக்கிழங்கு - 2

மிளகாய் - 5

பெ.வெங்காயம் - 1

வெண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு



செய்முறை

முதலில் கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

மேலும் படிக்க... குடைமிளகாய் சட்னி செய்வது எப்படி?

அதன்பின்னர் நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து அது சூடானதும் வெண்ணெய் தடவி உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் போல வேகவிடவும். நன்கு வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறலாம். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க... காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்...     

தினமும் கிரீன் டீ இத்தனை கப்தான் சாப்பிடணுமாம்....

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: