• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உணவுகள் குறித்த படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்வதால் உடல் எடை அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்!

உணவுகள் குறித்த படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்வதால் உடல் எடை அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்!

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

பெரும்பாலான மக்கள் தான் செல்லும் இடங்களை, சமைத்த உணவுகளை, தங்களுக்கு பிடித்த பாடல்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

  • Share this:
ஒரு புதிய ஆய்வின்படி, இன்ஸ்டாகிராமில் நீங்கள் சமைக்கும், சாப்பிடும் உணவுகளின் புகைப்படங்களை ஷேர் செய்வதால் ‘உடல் எடை’ அதிகரிக்கும் என்று தெரிய வந்திருக்கிறது.

இன்ஸ்டாகிராம் இன்றைய இளசுகள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தும் முக்கியமான ‘சோசியல் மீடியா’ ஆகும். இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மக்கள் தான் செல்லும் இடங்களை, சமைத்த உணவுகளை, தங்களுக்கு பிடித்த பாடல்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் உணவு படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து அதனை செய்யும் முறை, அவற்றின் பயன் வரை அனைத்தையும் சொல்கிறார்கள். இவ்வாறு உணவுப் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடும் நபர்களுக்கு உடல் எடை அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா தெற்கு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்த ஆய்வுகள் நடத்திய நிலையில், அதில் உணவு படங்களை ஷேர் செய்வதால் உணவு சுவைப்பது போன்ற உணர்வு, வாசனை மற்றும் அதன் சுவையில் கவனம் செலுத்துவது ஆகிய குணங்கள் அதிகரிக்கின்றன என்று தெரியவந்துள்ளது.



மேலும் hungry magazine என்ற இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, 145 மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இரண்டு குழுவை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தட்டு சீஸ் கிராக்கர் உணவு கொடுக்கப்பட்டது. அதில் ஒரு குழுவினரிடம், சாப்பிடுவதற்கு முன்பு அந்த உணவை ஸ்மார்ட்போனில் படம் எடுக்கும் படி கூறப்பட்டது. பிறகு அனைவரிடமும் உணவை எவ்வளவு விரும்பினார்கள்,மேலும் உணவு வேண்டுமா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆப்பிளை தோலோடுதான் சாப்பிட வேண்டுமாம்... ஏன் தெரியுமா..?

ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுத்தவர்கள் மற்றும் எடுக்காதவர்கள் ஆகிய இரண்டு குழுக்களின் முடிவுகளையும் ஆய்வுக்குட்படுத்தினர். அதில், ‘உணவை படம் எடுப்பவர்களிடையே உணவை உணரும் உணர்வுகள் வியக்கத்தக்க வகையில் அதிகரிக்கிறது என்றும், அதுதான் அவர்களிடையே பசியை அதிகமாக்குகிறது என்றும் ஆச்சர்யமான முடிவை கண்டறிந்தனர். உணவு பற்றிய நினைவுகள் மற்றும் நுகர்வு ஆகியவை நம் மூளையில் பதிவாகிறது.



அது நாம் எவ்வளவு உணவினை எடுத்துக் கொள்ளப்போகிறோம் என்பதனையும் முடிவு செய்கிறது. நாம் உணவை புகைப்படம் எடுக்கும் போது அந்த உணவை பற்றிய நினைவுகளை அதிகமாக மூளை எடுத்துக்கொள்கிறது. அதனால் தான் அதிக பசியை ஏற்படுத்துகிறது என ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.

பசி அதிகமாக ஏற்படுவதால் அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். இதனால் உடல் எடை அதிகரிப்பு உருவாகிறது. இன்ஸ்டகிராமில் உணவு புகைப்படங்களை பதிவிட்டு வருபவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவின் கலோரிகளை அளவிடுவது அவசியம். இதனால் உடல் எடையை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் ஆராச்சியாளர்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: