Post Covid Complications | கொரோனாவால் முடி உதிர்வு பிரச்சனையா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

காலை உணவை கட்டாயம் தவிர்க்கக் கூடாது. உடலின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு உதவுபவை என்பதால், காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலை உணவை கட்டாயம் தவிர்க்கக் கூடாது. உடலின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு உதவுபவை என்பதால், காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் முடி உதிர்வு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகும் அவர்கள் நோய்தொற்றுக்குப் பிறகு தோல் மருத்துவர்களை சந்திப்பது அதிகரித்துள்ளது. இப்பிரச்சனை ஆண், பெண் இரு பாலரையும் பாரபட்சமின்றி பாதிப்பது தெரியவந்துள்ளது.

முடி உதிர்விற்கான காரணம்:

கொரோனா வைரஸ் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கும். இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து முடி உதிர்வது மற்றும் கரடுமுரடாக முடி முளைத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த காலங்களில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றினால் முடி உதிர்தல் பிரச்சனையிலிருந்து மீண்டு வரலாம்.

கொரோனாவுக்குப் பிந்தைய காலங்களில் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்பவர்கள், இந்த சிக்கலில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை இந்தியாவின் தலைச்சிறந்த ஊட்டச்சத்து நிபுணர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில், எடுத்துக் கொள்ள வேண்டிய மற்றும் விலக்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

என்ன சாப்பிட வேண்டும்:

பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் பேசும்போது, அந்தந்த பருவகால உணவுகள், பாரம்பரிய மற்றும் உள்ளூர் உணவுகளை சாப்பிடுவதே சிறந்தது எனக் கூறியுள்ளார். முடி உதிர்வைக் குறைக்க பல்வேறு வகையான பொடிகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸை எடுப்பதைவிட, ஆரோக்கியமான உணவை உண்பதின் மூலம் தேவையான ஊட்டச்சத்தைப் பெறலாம் என்கிறார். இதன் மூலம் மருந்து மாத்திரைகள் இல்லாமல் இயற்கையாக தீர்வு காண முடியும் என அறிவுறுதியுள்ளார்.

Must Read | உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்! இதை ஃபாலோ பண்ணா போதும்!

உணவில் இருக்க வேண்டிய 3 ஐட்டங்கள்:

காலை உணவில் வெண்ணெய் அல்லது மகான் கட்டாயம் இருக்க வேண்டும். இதில் வைட்டமின் ஏ, கே, இ, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 9 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமத்தில் வறட்சி ஏற்படாமல் ஈரப்பதமாக இருக்கும். முடி உதிர்தல் பிரச்சனை வெகுவாக குறையும்.

கார்டன்க்ரெஸ் விதைகளில், உடலுக்கு தேவையான இரும்புச் சத்து, ஃபோலேட், வைட்டமின் ஏ, உணவு நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் புரதம் நிறைந்துள்ளன. ஆலிவ் ஆயிலைக் கொண்டு இந்த விதைகளில் லட்டு செய்து சாப்பிடும்போது சரும பொலிவு குறைவது தடுக்கப்படுவதுடன், முடி உதிர்தல் பிரச்சனையும் இருக்காது.

பருப்பு வகைகள், அரிசி, நெய் மற்றும் பன்னீர் பராத்தா ஆகியவைகளில் போதுமான வைட்டமின்கள் இருக்கின்றன. அன்றாட உணவுகளில் இவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முடி உதிர்தல் பிரச்சனைகளுக்கு இதுபோன்ற உணவுகள் மூலம் தீர்வு காணலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தவிர்க்க வேண்டியவை:

ஊட்டச்சத்து நிபுணர் ருஜூதா திவேகர், தவிர்க்க வேண்டிய உணவுகள் பட்டியலில் 3 விஷயங்களை குறிப்பிடுகிறார். காலை உணவை கட்டாயம் தவிர்க்கக் கூடாது எனக் கூறும் அவர், உடலின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு உதவுபவை என்பதால், காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார். இரண்டாவதாக, அரிசி உணவில் கொழுப்புச் சத்து இருக்கும் எனக் கருதி பலர் அரிசி உணவுகளை தவிர்க்கின்றனர். ஆனால், அதில் ஆரோக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. மூன்றாவதாக, இரவு நேரத்தில் சீக்கிரம் உறங்கச் செல்ல வேண்டும். அதிக நேரம் கண் விழித்து இருக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
Published by:Archana R
First published: