பிரியாணி.. பேர் கேட்டாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறும்.. எல்லா ஊர்லயும் பிரியாணி ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனி ஸ்டைல் இருக்கும்.. பிரியாணி பிரியர்கள் தேடி தேடி ஒவ்வொரு ஊர் பிரியாணியையும் ஒரு பிடி பிடிப்பார்கள். அதே மாதிரி கேரளா தலச்சேரி பிரியாணிக்கு ஒரு தனி ருசி இருக்கு. அதுக்கு ஒரு ரசிகர் கூட்டம்.. நீங்க இந்த பிரியாணியை டேஸ்ட் பண்ணி இருக்கீங்களா...இந்த கிறிஸ்துமஸ்-க்கு கேரளாவில் மிகவும் பிரபலமான பிரியாணிகளில் ஒன்றான தலச்சேரி பிரியாணியை ட்ரை பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்
வெங்காயம் வெட்டப்பட்டது - 7
எண்ணெய் - போதுமானது
நெய் - தேவையானது
கரம் மசாலா செய்ய
ஏலக்காய் - 4
கிராம்பு - 3
இலவங்கப்பட்டை - 3
ஜாதிக்காய் - ¼ டீஸ்பூன்
பெருஞ்சீரகம் தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - ¼ டீஸ்பூன்
அரைக்க
இஞ்சி நறுக்கியது - 3 இன்ச்
பூண்டு நறுக்கியது - 4 பெரிய கிராம்பு
பச்சை மிளகாய் - 6 முதல் 8
சிக்கன் மசாலா செய்ய
நறுக்கிய தக்காளி - 7
கோழி, எலும்பு - 10 துண்டுகள்
புதினா இலைகள் - நறுக்கியது சிறிதளவு
கொத்தமல்லி - நறுக்கியது - ¼ கப்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - 1½ டீஸ்பூன்
அரிசி சமைப்பதற்கு
கைமா அரிசி அல்லது ஜீரக சம்பா அரிசி - 2½ கப்
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
இலவங்கப்பட்டை - 2 அங்குல துண்டு
பிரியாணி இலைகள் - 3
கருப்பு மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - 1½ டீஸ்பூன்
தண்ணீர் - 3 கப் (ரைஸ் குக்கரில் சமைக்க)
வறுத்த முந்திரி - ½ கப்
கொத்தமல்லி, நறுக்கியது - 2 கைப்பிடி
புதிய புதினா இலைகள், நறுக்கியது - 5 இலைகள்
குங்குமப்பூ - ¼ கப் பாலில் ஊறவைத்த 2 சிட்டிகைகள்
செய்முறை
1. வெங்காயத்தை நீளமான துண்டுகளாக சமமாக நறுக்கவும்
2. ஒரு வாணலியை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் சேர்க்கவும் அல்லது பாதி எண்ணெய் மற்றும் பாதி நெய்யைப் பயன்படுத்தவும்.
3. வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கி பின்னர் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
4. பின்னர் கரம் மசாலா செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களைக் கலந்து தனியாக வைக்கவும்.
5. ஒரு மிக்ஸியில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை அரைத்து, தனியாக வைக்கவும்.
அரிசி சமைத்தல்
1. இந்த தலச்சேரி பிரியாணி செய்ய, கைமா அரிசி அல்லது ஜீரக சம்பா அரிசியை எடுத்துக் கொள்ளவும்.
2. அப்படி எதுவும் இல்லையென்றால் பாசுமதி அரிசியைப் பயன்படுத்துங்கள்.
3. முதலில் அரிசியை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். அதன் பிறகு, தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
4. இப்போது நடுத்தர வெப்பத்தில் ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைக்க வேண்டும். 2½ கப் அரிசிக்கு 4½ கப் தண்ணீர் தேவை.
5. வாணலியில் நெய் ஊற்றி மசால பொருட்களை போட்டு தளித்த பின்னர் உப்பு சேர்த்து தண்ணீரை ஊற்றவும். பின்னர் தண்ணீரை சிறிது கொதிக்க விடவும்.
6. இப்போது ஊறவைத்த அரிசியை தண்ணீரில் சேர்க்கவும்.
7. அரிசி கிட்டதட்ட வேகும் வரை 15 நிமிடங்களுக்கு மூடி வைத்து சமைக்கவும்.
8. குறிப்பாக அரிசியை அதிகமாக சமைக்க வேண்டாம்.
அரிசி நன்கு வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, அரிசியை மூடி வைக்கவும்
சிக்கன் மசாலா தயாரித்தல்
1. மிதமான தீயில் ஒரு பெரிய பாத்திரம் வைக்கவும். அதில் நறுக்கிய தக்காளியை போட்டு நன்கு மசிக்கவும்.
2. அதில் அரைத்த இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் வதக்க வேண்டும். அதனுடன் புதினா இலைகளைச் சேர்த்து, நன்கு வதக்கவும்.
3. இதனுடன் சிக்கன் துண்டுகள், உப்பு மற்றும் தயாரிக்கப்பட்ட கரம் மசாலாவை சேர்க்கவும். இவை மூன்றையும் நன்றாக கலக்கவும்.
4. இதனை மூடி 15 நிமிடம் சமைக்கவும். கோழி பாதி வெந்ததும்.
வறுத்த வெங்காயத்தில் ¾ வது பகுதியை சிக்கனுடன் சேர்க்கவும்
5. மீதமுள்ள வறுத்த வெங்காயத்தை ஒதுக்கி வைக்கவும்.
6. இவை அனைத்தும் நன்கு கலந்து மேலும் 10 முதல் 15 நிமிடங்கள் மூடி வைத்து சமைக்கவும், இதனால் வறுத்த வெங்காயத்தின் சுவை சமைத்த கோழியில் சேரும்.
7. தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து சமைக்கலாம்.
இந்த கட்டத்தில், மசாலா ஒரு நல்ல நிறத்தைக் கொண்டிருக்கும் மற்றும் நறுமணமாக மாறும்.
8. இப்போது நறுக்கிய கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் வதக்கவும்.
9. சிக்கன் மசாலா தண்ணீர் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மேலும் உப்பு சேர்த்து கொள்ளலாம்.
சிக்கன்-ரைஸ் மற்றும் தம் செய்யும் முறை
1. ஒரு பாத்திரத்தில், குங்குமப்பூவை ¼ கப் பாலில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
2. ஒரு கடாயில் செய்த சிக்கன் மசாலாவை சமமாக பரப்பவும்.
அதில் சமைத்த அரிசியை பரப்பவும். அந்த அரிசியின் மீது குங்குமப்பூ பாலை ஊற்றவும்.
3. மீதமுள்ள வறுத்த வெங்காயம், நறுக்கிய புதினா, நறுக்கிய கொத்தமல்லி மற்றும் முந்திரி பருப்புகளை அரிசியின் மீது தூவி விடவும்.
4. இப்போது பாத்திரத்தை இறுக்கமாக மூடி, பாத்திரத்தின் மேல் ஒரு கனமான மற்றொரு பாத்திரைத்தையோ அல்லது தோசை கல்லையோ வைக்க வேண்டும்.
5. இப்போது கடாயை மிகக் குறைந்த தீயில் வைத்து 10 நிமிடம் சமைக்கவும்.
6. 10 நிமிடங்களுக்கு தம் போட வேண்டும். பிறகு, அடுப்பில் இருந்து கடாயை அகற்றவும். அதனை சில நிமிடங்கள் ஆற விடவும்.
7. இப்போது மலபார் தலச்சேரி சிக்கன் தம் பிரியாணி தயார்.
8. இந்த பிரியாணியை ரைதா, ஊறுகாய் வைத்து பரிமாறலாம்.
9. மறுநாள் பிரியாணி சுவையாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால் இதை முந்தைய நாள் இரவு சமைத்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
10. அதனை பரிமாறும் முன் மைக்ரோவேவ் அல்லது நீராவியில் சூபடுத்தி பரிமாறலாம்.
குறிப்புகள்
வறுத்த வெங்காயம், கரம் மசாலா மற்றும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை முந்தைய நாளளே அரைத்து காற்று புகாத டப்பாவில் எடுத்து ஃபிரிஜில் வைத்துக் கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.