ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சளி, தொண்டை வலிக்கு பூண்டு மிளகு குழம்பு வச்சு சாப்பிடுங்க... எளிமையான செய்முறை டிப்ஸ்..!

சளி, தொண்டை வலிக்கு பூண்டு மிளகு குழம்பு வச்சு சாப்பிடுங்க... எளிமையான செய்முறை டிப்ஸ்..!

சளி, தொண்டை வலிக்கு பூண்டு மிளகு குழம்பு

சளி, தொண்டை வலிக்கு பூண்டு மிளகு குழம்பு

இந்த நேரத்தில் பூண்டு மிளகுக் குழம்பு செய்து சாப்பிட்டால் அனைத்தும் சரியாகும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பனிக்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு இருக்கும். இந்த நேரத்தில் பூண்டு மிளகுக் குழம்பு செய்து சாப்பிட்டால் அனைத்தும் சரியாகும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள்

  நல்லெண்ணெய் - 4 tsp

  கடுகு - 1/2 tsp

  சீரகம் - 1/2 tsp

  வெந்தையம் - 1/2 tsp

  பச்சை மிளகாய் - 1

  பூண்டும் - 10 பற்கள்

  கருவேப்பிலை - சிறிதளவு

  சின்ன வெங்காயம் - 15

  மஞ்சள் தூள் - 1/2 tsp

  பெருங்காயத்தூள் - 1/2 tsp

  தக்காளி - 3

  குழம்பு மிளகாய் தூள் - 3 tsp

  புளி - 1 எலுமிச்சை அளவு

  உப்பு - தே.அ

  மிளகுத்தூள் - 1 1/2 tsp

  செய்முறை :

  கடாய் வைத்து எண்ணெய் விடவும். காய்ந்ததும் கடுகு, சீரகம் , வெந்தயம் சேர்த்து பொறிக்கவிடவும். பின் கருவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  அதில் நன்கு பூண்டு பற்களை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

  பூண்டு வந்தங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்துக்கொள்ளவும்.

  தக்காளி கூழ் போல் கரைந்து எண்ணெய் பிரிந்து வரும்போது மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

  மழைக்காலத்தில் சளி, இருமலை கட்டுப்படுத்தும் திப்பிலி ரசம் வச்சு சாப்பிடுங்க... ரெசிபி இதோ...

  பின் ஊற வைத்த புளியை கரைத்து ஊற்றவும். பின் உப்பு சேர்த்து சரிபார்த்து மூடிவிடவும். 2 நிமிடத்திற்கு நன்கு கொதிக்க வேண்டும்.

  அந்த இடைவெளியில் எடுத்து வைத்த பூண்டு பற்களுடன் 5 மிளகு சேர்த்து ஒன்றும் பாதியுமாக இடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  2 நிமிடங்கள் கழித்து மிளகுத்தூள் சேர்த்து கலந்துவிட்டு பின் இடித்த பூண்டையும் சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிடுங்கள்.

  1 நிமிடம் கழித்து குழம்பு சுருங்கியதும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

  அவ்வளவுதான் பூண்டு மிளகுக் குழம்பு தயார்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Cold, Garlic, Pepper