பொங்கல் உணவு தமிழ் குடும்பங்களில் மார்னிங் பிரேக் ஃபாஸ்டில் கட்டாயம் இடம் பிடிக்கிறது. நெய், முந்திரி போன்ற உணவுகளை காலையில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதே போல் அதில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம் இஞ்சி செரிமானத்திற்கு உதவும். பொங்கலுக்கு சட்னியை விடவும் சாம்பார் தான் அதிக ருசி கொடுக்கும். சாம்பாரில் பல வகையுண்டு.டிபன் சாம்பார், தாளித்த சாம்பார், பிளைன் சாம்பார், மிளகாய் சாம்பார், காய்கறி சாம்பார், புளி சாம்பார் என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதில் பொங்கலுக்கு சில குறிபிட்ட பக்குவத்தில் சாம்பார் வைத்தால் ருசியாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக கத்திரிக்காய் சேர்த்து வைக்கும் சாம்பார் பொங்கலுக்கு தனி ருசி தரும். பெரும்பாலான ஹோட்டல்களில் கத்திரிக்காய் சாம்பார் தான் பொங்கலுக்கு அதிகம் பரிமாறப்படும். அந்த சாம்பாரை எப்படி வைப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த சாம்பார் ரெசிபி வீடியோ அம்மா சமையல் வீடியோஸ் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டப்பட்டுள்ளது.
இப்படியொரு பிரட் ஆம்லெட் செஞ்சா உடனே காலியாகிவிடும்!
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு, கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடுகு, உப்பு
செய்முறை:
1. முதலில் குக்கரில் ஊற வைத்த துவரம் பருப்பு, தக்காளி, வெங்காயம், பூண்டு, நறுக்கிய கத்திரிக்காய், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
2. பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு வேக வைக்க வேண்டும்.
3. பருப்பு வெந்ததும், அதை நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
4. முக்கியமான விஷயம், இந்த சாம்பாருக்கு புளி மற்றும் மிளகாய் தூள் சேர்க்க கூடாது. புளிப்புக்கு தக்காளி சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சைவ முட்டை பொரியல்.. ஒருமுறை செய்து பாருங்கள் கட்டாயம் பிடிக்கும்!
5. இப்போது கடாயில் எண்னெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டி கிளறி இறக்கினால் சூப்பரான டேஸ்டியான பொங்கல் சாம்பார் தயார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.