ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Pongal Recipe 2023 | பொங்கல் ஸ்பெஷல் பூசணிக்காய் பச்சை மொச்சை பொரியல் செய்ய சிம்பிள் ரெசிபி.!

Pongal Recipe 2023 | பொங்கல் ஸ்பெஷல் பூசணிக்காய் பச்சை மொச்சை பொரியல் செய்ய சிம்பிள் ரெசிபி.!

பூசணிக்காய் பச்சை மொச்சை பொரியல்

பூசணிக்காய் பச்சை மொச்சை பொரியல்

பொதுவாக மஞ்சள் பூசணிக்காய் சிறிது இனிப்பு சுவையுடன் தான் இருக்கும். ஒரு சில காய்களில் இருக்காது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பண்டிகை வரப்போகிறது. பொதுவாக பண்டிகைக்கு வெறும் வெண் பொங்கல் மட்டும் செய்யாமல் அதனுடன் கூட்டு பொரியல் என செய்வது வழக்கம். அவற்றுள் கண்டிப்பாக பூசணிக்காய் பொரியலும் உண்டு. பொங்கல் படையலுக்கு பூசணிக்காயையும் பச்சை மொச்சையும் வைத்து எப்படி சுவையான சுலபமாக பொரியல் செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மஞ்சள் பூசணிக்காய் - 1/4 கிலோ

பச்சை மொச்சை - 1 கப்

சின்ன வெங்காயம் - 10-ல் இருந்து 12

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 கொத்து

தேங்காய் துருவல் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க

செய்முறை :

  • பச்சை மொச்சையை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிய விடுங்கள்.
  • பொரிந்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை கீறிப் போட்டு நன்றாக வெங்காயாம் பொந்நிறமாகும் வரை வதக்குங்கள்.
  • அதன்பின்னர் தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிய பூசணிக்காயை சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிது வதக்கிய பின்னர் வேகவைத்த பச்சை மொச்சையை சேர்த்துக் கிளறவும்.
  • அதன்பின்னர் தேவையான அளவு உப்பு, சாம்பார் தூள் சேர்த்து நன்கு வதங்கிய பின்னர் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி வேக வைப்பதற்கு சிறிது நேரம் தண்ணீர் சேர்த்து மூடிவைத்து சிறிது நேரம் வேக விட்டு இறக்கினால் சுவையான பூசணிக்காய் பச்சை மொச்சை பொரியல் தயார்.

குறிப்பு : பொதுவாக மஞ்சள் பூசணிக்காய் சிறிது இனிப்பு சுவையுடன் தான் இருக்கும். ஒரு சில காய்களில் இருக்காது. அப்படி இனிப்பு சுவை இல்லாத பூசணிக்காயை வைத்து இந்த பொரியலை நீங்கள் செய்யும் பட்சத்தில் அப்படியே செய்தால் பொரியல் சப்பென்று சுவையற்று இருக்கும். விரும்பினால் 1 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

First published:

Tags: Pongal, Pongal 2023, Pongal recipes