ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Pongal Recipe 2023: வெண் பொங்கலுக்கு நல்ல சைட் டிஷ்.. இதை டிரை பண்ணி பாருங்கள்..!

Pongal Recipe 2023: வெண் பொங்கலுக்கு நல்ல சைட் டிஷ்.. இதை டிரை பண்ணி பாருங்கள்..!

மொச்சை பயிறு மசாலா

மொச்சை பயிறு மசாலா

Pongal recipe 2023 | மொச்சை பயறு மசாலா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்த தை பொங்கலுக்கு ஸ்பெஷலாக மொச்சை பயிறு மசாலா செய்து பாருங்கள் நல்ல ருசியாக இருக்கும். தென் மாவட்டங்களில் பொங்கலுக்கு இந்த மொச்சை பயிறு இல்லாமல் சூரிய பகவானுக்கு படையல் வைக்க மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் இந்த மொச்சை பயிறு வெண் பொங்கலுடன் சாப்பிட அலாதியாக இருக்கும். இந்த பதிவில் மொச்சை பயிறு மசாலா எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

வெள்ளை மொச்சைப்பயறு - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 20

பச்சை மிளகாய் - 2

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

அரிசி - 1 டீஸ்பூன்

பொரிகடலை - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை

1. மொச்சைப் பயறை முன்தின இரவு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

2. அதனை எடுத்து மறுநாள் வேக வைத்துக் கொள்ளவும்.

3. பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேபோலவே பச்சை மிளகாயை சிறிது சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.

4. பின்னர் அரிசி, பொரிகடலையை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.

5. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

5. அதனுடன் வேக வைத்த மொச்சையை கலந்து நன்றாக வதக்க வேண்டும்.

6. பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி இந்த அனைத்து கலவையையும் ஒரு கொதி கொதிக்க வைக்க வேண்டும். ,

7. பின்னர் அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டுக் கிளறவும். ஓரளவு கெட்டியானதும் தூளாக்கிய பொருட்கள் போட்டுக் கிளறி இறக்கவும்

8. இப்போது வெண் பொங்கலுக்கு சூப்பரான சைடிஸ், மொச்சை பயிறு மசாலா ரெடி.

First published:

Tags: Pongal 2023, Pongal recipes