ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Pongal Recipe 2023 | பொங்கல் படையலுக்கு மொறு மொறுனு மசால் வடை செய்ய ரெசிபி.!

Pongal Recipe 2023 | பொங்கல் படையலுக்கு மொறு மொறுனு மசால் வடை செய்ய ரெசிபி.!

மசால் வடை

மசால் வடை

ஒவ்வொரு வடையும் தட்டிய பின்னர் பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு கையை  நனைத்து கொள்ளுங்கள். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

பொங்கல் திருநாளில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் மட்டுமல்லாது பொங்கலுடன் பல உணவுகள் சமைத்து படையலுக்கு வைப்பது வழக்கம். அப்படி பொங்கலுடன் நிச்சயம் எல்லோருக்கும் பிடித்த ஒரு சூப்பர் காம்பினேஷன் வடை. அதிலும் மசால் வடை இல்லாமல் படைக்க மாட்டார்கல். சிலருக்கு மசால் வடை சுட தெரிந்தாலும் மொறுமொறுவென சுடுவதில் சில ட்ரிக்ஸ் இருப்பது தெரிவதில்லை. அதனால் மசால் வடையை எப்படி லாவகமாக சுடலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கடலை பருப்பு - 1 கப்

உப்பு - தே. அளவு

பட்டை - 1 இஞ்ச்

காய்ந்த மிளகாய் - 2

சீரகம் - 3/4 tsp

சோம்பு - 3/4 tsp

வெங்காயம் - 1

புதினா - ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை - 1 கொத்து

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

மஞ்சள் - 1 சிட்டிகை

எண்ணெய் - பொரிக்க

செய்முறை :

 • கடலைப் பருப்பை 1 .1/2 மணி நேரம் ஊற வைத்தால் போதும் அப்போதுதான் வடை மொறுமொறுவென வரும். ஊறியதும் தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள்.
 • பட்டை, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக ஊறவைத்த கடலை பருப்பு உப்பு போட்டு ஒரு சுற்று சுற்றுங்கள்.
 • மாவு மைய இல்லாமல் மொறப்பாக அரைக்கவும். ஒரு சில கடலைப் பருப்புகள் அப்படியே இருக்க வேண்டும்.
 • தற்போது அரைத்த மாவை அகல பாத்திரத்தில் போடவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா,இஞ்சி பூண்டு பேஸ்ட் என அனைத்தையும் போட்டு பிசையுங்கள்.
 • கொஞ்சம் வாயில் வைத்து உப்பு சரியாக உள்ளதா என பார்த்துக்கொள்ளவும். தற்போது கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வையுங்கள்.
 • அடுத்ததாக உள்ளங்கையில் தண்ணீர் நனைத்து சிறிதளவு மாவை எடுத்து உள்ளங்கையில் வட்டமாகத் தட்டி அப்படியே லாவகமாக எண்ணெய் கடாயில் போடவும்.
 • இப்படி ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மசால் வடை தயார்.

Also Read : Pongal Recipe 2023 | சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சம்பாரவை பொங்கல் ரெசிபி.!

குறிப்பு : ஒவ்வொரு வடையும் தட்டிய பின்னர் பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு கையை  நனைத்து கொள்ளுங்கள். கையில் வரவில்லை எனில் பால் கவர் அல்லது வெற்றிலை, வாழை இலை பயன்படுத்தி தண்ணீர் தொட்டு வடை தட்டி கடாயில் போட்டால் நழுவிக்கொண்டு விழும்.

First published:

Tags: Pongal, Pongal 2023, Pongal recipes