ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Pongal Recipe 2023 | இந்த பொங்கலுக்கு ஹெல்தியான தினைப் பொங்கல் செய்து சாப்பிடுங்க.!

Pongal Recipe 2023 | இந்த பொங்கலுக்கு ஹெல்தியான தினைப் பொங்கல் செய்து சாப்பிடுங்க.!

தினைப் பொங்கல்

தினைப் பொங்கல்

இந்த பொங்கலுக்கு வழக்கம் போல் சாதரண வெண் பொங்கலுக்கு செய்யப்படும் சாம்பார் மற்றும் தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறினாலே சுவையாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. வழக்கம் போல் கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் செய்வீர்கள். சில பேருக்கு சலித்து போயிருக்கும் அதனால் வித்தியாசமாக ஏதேனும் பொங்கல் செய்ய விரும்புவீர்கள். நீங்கள் பச்சரிசிக்கு பதில் வித்தியாசமாக வேறு தானியத்தை வைத்து ஹெல்தியான பொங்கல் ஏதேனும் செய்ய விரும்பினால் இந்த தினைப் பொங்கல் ஒரு பெஸ்ட் ஆப்ஷன்.!

தேவையான பொருட்கள்:

தினை அரிசி - 1/4 கிலோ

பாசிப்பருப்பு - 100 கிராம்

நெய் - தேவையான அளவு

இஞ்சி - 1 துண்டு

மிளகு, சீரகம் 1 ஸ்பூன்

பெருங்காயம் - சிறிது கறிவேப்பிலை - சிறிது

முந்திரி -10

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • கடாயில் தினை அரிசியைப் போட்டு நிறம் மாறும் வரை வறுக்கவும்.
  • அதன் பின்னர் பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும்.
  • இரண்டையும் சேர்த்து 1: 2 1/2 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து வேகவைக்கவும்.
  • பின் நெய்யில், முந்திரி, இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, வேகவைத்த தினையில் கலந்து உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி எடுத்து வைக்கவும்.

Also Read : Pongal Recipe 2023 | இதுவரை அவல் பொங்கல் ட்ரை பண்ணிருக்கீங்களா? ரொம்ப ஈஸி.. இதோ ரெசிபி.!

குறிப்பு : இந்த பொங்கலுக்கு வழக்கம் போல் சாதரண வெண் பொங்கலுக்கு செய்யப்படும் சாம்பார் மற்றும் தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறினாலே சுவையாக இருக்கும். மேலும் இந்த பொங்கலை குக்கரில் வைக்காமல் சோற்றுப்பானையிலும் வேக வைத்து செய்யலாம். மேலும் வேக வைக்கும் பொழுது சிறிது நெய் விட்டால் வாசனையாக இருக்கும்.

First published:

Tags: Pongal, Pongal 2023, Pongal recipes