ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Pongal Recipe 2023 | சர்க்கரைப் பொங்கலுக்கு பதில் வித்தியாசமா ஃப்ரூட்ஸ் பொங்கல் செய்து சாப்பிடுங்க!

Pongal Recipe 2023 | சர்க்கரைப் பொங்கலுக்கு பதில் வித்தியாசமா ஃப்ரூட்ஸ் பொங்கல் செய்து சாப்பிடுங்க!

ஃபுரூட்ஸ் பொங்கல்

ஃபுரூட்ஸ் பொங்கல்

இந்த பொங்கலில் பலாப்பழம் கிடைத்தால் நிச்சயம் சேர்த்துக் கொள்ளுங்கள். சுவை அருமையாக இருக்கும். மேலும் மாம்பழம், அன்னாசி போன்ற பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. வழக்கம்போல் கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் செய்வீர்கள். சில பேருக்கு சலித்து போயிருக்கும். அதனால் வீட்டில் பழங்கள் இருப்பின் இந்த ஃப்ரூட்ஸ் பொங்கலை செய்து பாருங்கள். நிச்சயம் விரும்பி சாப்பிடுவீர்கள்.

தேவையான பொருட்கள்:

அரிசி - 1/4 கிலோ

உலர்ந்த திராட்சை - 20

மாதுளை முத்துகள் - ஒரு கப்

வாழைப்பழம் - 2

ஆப்பிள்- 1

சப்போட்டா - 2

பப்பாளிப்பழத் துண்டுகள் - ஒரு கப்

நெய் - 100 மில்லி

வறுத்த முந்திரி - 10

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

  • அரிசியை நான்கு பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.
  • வாழைப்பழத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கவும். ஆப்பிளை பொடியாக நறுக்கவும். சப்போட்டாவை தோல் உரித்து விதை நீக்கி நறுக்கவும். பப்பாளியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • வேக வைத்த சாதத்தை ஒரு அகலமான பேஸினில் போட்டு, எல்லா பழங்களையும் சேர்த்து, நெய் விட்டு. உப்பு, வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இறுதியாக மேலே உலர்ந்த திராட்சையை தூவி விட்டால் ஃப்ரூட்ஸ் பொங்கல் ரெடி!

Also Read : Pongal Recipe 2023 | இந்த பொங்கலுக்கு வித்தியாசமாக வெஜிடபிள் பொங்கல் செய்து பாருங்கள்!

குறிப்பு : இந்த பொங்கலில் பலாப்பழம் கிடைத்தால் நிச்சயம் சேர்த்துக் கொள்ளுங்கள். சுவை அருமையாக இருக்கும். மேலும் மாம்பழம், அன்னாசி போன்ற பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இனிப்பு சுவை பத்தாதவர்கள் சாப்பிடும்போது ஒரு டேபிள் ஸ்பூன் தேன் விட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

First published:

Tags: Pongal, Pongal 2023, Pongal recipes