ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Pongal Recipe 2023 | பொங்கலுக்கு மொறுமொறுனு வடை சுடலனா எப்படி? சுவையான மெதுவடை ரெசிபி இதோ.!

Pongal Recipe 2023 | பொங்கலுக்கு மொறுமொறுனு வடை சுடலனா எப்படி? சுவையான மெதுவடை ரெசிபி இதோ.!

மெது வடை

மெது வடை

வடையை நன்றாக தட்டுவதற்கு ஒவ்வொரு வடையும் தட்டிய பின்னர் பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு கையை  நனைத்து கொள்ளுங்கள். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

 பொங்கல் திருநாளில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் மட்டுமல்லாது பொங்கலுடன் பல உணவுகள் சமைத்து படையலுக்கு வைப்பது வழக்கம். அப்படி பொங்கலுடன் நிச்சயம் எல்லோருக்கும் பிடித்த ஒரு சூப்பர் காம்பினேஷன் வடை. அதிலும் மொறுமொறுவென எண்ணெயில் பொரித்த மெது வடையை பொங்கல் சாப்பிடும்போது சாப்பிட்டால் சுவையே தனி. இதற்கு மெது வடை, உளுந்த வடை, ஓட்ட வடை என பல செல்ல பெயர்கள் உண்டு. அப்படிப்பட்ட அனைவருக்கும் பிடித்த மெது வடையை எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுவென பொங்கல் பண்டிகைக்கு நீங்கள் செய்து அசத்த ஈஸி ரெசிபி இதோ.!

தேவையான பொருட்கள் :

உளுந்து - 1கப்

மிளகு - 10 ( இடித்து சேர்த்து கொள்ளுங்கள் )

பச்சை மிளகாய் - 2 ( பொடியாக நறுக்கியது )

அரிசிமாவு - 1 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1 ( பொடியாக நறுக்கி வதக்கி கொள்ளுங்கள் )

உப்பு - 1 டீஸ்பூன்

இஞ்சி சீவல் - 1 துண்டு (சீவியது)

எண்ணெய் - பொரிக்க

கொத்தமல்லி - கையளவு ( பொடியாக நறுக்கியது )

செய்முறை : 

  • உளுந்தை நன்றாக கழுவி 1 மணி நேரம் நன்றாக ஊறவைத்துக் கொள்ளுங்கள்.
  • ஊற வைத்த உளுந்தை மிக்ஸி அல்லது நிறைய மாவு அரைக்கும் பர்சத்தில் கிரைண்டரில் அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் வடை மாவு பதத்திற்கு வரும்வரை மட்டும் அளவாக சேர்த்து அரைப்பது முக்கியம்.
  • அரைத்த மாவில் உப்பு, மிளகு, பச்சை மிளகாய், அரிசி மாவு, வெங்காயம், இஞ்சி சீவல், கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
  • கடாய் வைத்து வடை சுட எண்ணெய் ஊற்றி காய வையுங்கள். எண்ணெய் காய்ந்துவிட்டதை உறுதி செய்ய சிறு துளி மாவை போட்டுப் பாருங்கள். உப்பி பொறிந்து வந்தால் எண்ணெய் ரெடி
  • அடுத்து உள்ளங்கையில் தண்ணீரில் நனைத்து ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து தட்டுங்கள். வடை போல் வட்டமாக தட்டியதும் கட்டை விரலை வைத்து நடுவே ஒரு ஓட்டை போட்டுக்கொள்ளுங்கள்.
  • பின்னர் பொந்நிறமாகும் வரை சுட்டெடுத்தால் மொறுமொறுப்பான மெது வடை தயார்.

Also Read : Pongal Recipe 2023 | பொங்கல் ஸ்பெஷல் பூசணிக்காய் பச்சை மொச்சை பொரியல் செய்ய சிம்பிள் ரெசிபி.!

குறிப்பு : ஒவ்வொரு வடையும் தட்டிய பின்னர் பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு கையை  நனைத்து கொள்ளுங்கள். கையில் வரவில்லை எனில் பால் கவர் அல்லது வெற்றிலை, வாழை இலை பயன்படுத்தி தண்ணீர் தொட்டு வடை தட்டி கடாயில் போட்டால் நழுவிக்கொண்டு விழும்.

First published:

Tags: Pongal, Pongal 2023, Pongal recipes