ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Pongal Recipe 2023 | டயட் இருப்பவர்கள் இந்த பொங்கல் பண்டிகைக்கு சாப்பிட ஓட்ஸ் பொங்கல் ரெசிபி.!

Pongal Recipe 2023 | டயட் இருப்பவர்கள் இந்த பொங்கல் பண்டிகைக்கு சாப்பிட ஓட்ஸ் பொங்கல் ரெசிபி.!

டயட் இருப்பவர்களுக்காக ஓட்ஸ் பொங்கல் ரெசிபி.!

டயட் இருப்பவர்களுக்காக ஓட்ஸ் பொங்கல் ரெசிபி.!

இந்த பொங்கலை தாளிக்க நெய்க்கு பதில் செக்கு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை கூட பயன்படுத்தலாம். மேலும் விருப்பப்பட்டால் பச்சை பட்டாணியை சேர்த்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. வழக்கம் போல் கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் செய்வீர்கள். இரண்டிலுமே தாளிப்பதற்கு ஒன்று நெய் அல்லது எண்ணெய் அதிகளவில் சேர்த்து செய்தால் தான் சுவை நன்றாக இருக்கும். ஆனால் டயட் இருப்பவர்களுக்கு ஏதேனும் இதுபோன்ற பண்டிகை காலம் வந்தாலே கலோரி குறைவாக சாப்பிடுவதற்கு மிகவும் சிரமப் படுவார்கள். வழக்கம் போல் இருக்கும் டயட்டை கடைபிடிக்கவில்லை என்றாலும் கூட அதற்கான மாற்று உணவு செய்து சாப்பிட்டால் பண்டிகை கால உணவை சாப்பிட்டது போலும் இருக்கும். டயட்டும் பெரிதளவில் பாதிக்கப்படாதவாறு இருக்கும். அப்படி டயட் இருப்பவர்கள் இந்த பொங்கல் பண்டிகைக்கு ஓட்ஸ் பொங்கல் செய்து மகிழ்ச்சியாக சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1 கப்

பாசிப்பருப்பு - 1/2 கப்

இஞ்சி - ஒரு சிறு துண்டு

பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை

உப்பு-தேவையான அளவு

தாளிக்க:

நெய் - 1 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - 1 கொத்து

முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)

செய்முறை:

  • வாணலியில் ஓட்ஸ், பாசிப்பருப்பு ஆகியவற்றை, தனித்தனியாக இலேசாக வறுத்தெடுக்கவும்.
  • இஞ்சியின் தோலைச் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை, இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.
  • மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
  • குக்கரில், வறுத்த ஓட்ஸ், பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு மற்றும் 3 கப் தண்ணீரை விட்டு மூடி, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். சற்று ஆறியவுடன், குக்கரைத் திறந்து நன்றாக மசித்து விடவும்.
  • வாணலி ஒன்றில் மிகவும் சிறிதளவு நெய்யை விட்டுச் சூடாக்கவும். நெய் சூடானவுடன், அதில் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மிளகு, சீரகப் பொடியைப் போட்டு, அதை பொங்கலின் மேல் ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு :  இந்த பொங்கலை தாளிக்க நெய்க்கு பதில் செக்கு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை கூட பயன்படுத்தலாம். மேலும் விருப்பப்பட்டால் பச்சை பட்டாணியை சேர்த்துக் கொள்ளலாம்.

First published:

Tags: Pongal, Pongal 2023, Pongal recipes