ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Pongal Recipe Tips : பாரம்பரிய பொங்கல் செய்ய சில டிப்ஸ்!

Pongal Recipe Tips : பாரம்பரிய பொங்கல் செய்ய சில டிப்ஸ்!

Pongal 2022 | குக்கர் பொங்கலுக்கும், பானை பொங்கலுக்கும் வித்தியாசம் தெரியாமல், ருசி மாறாமல் இருக்க வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸை கடைபிடியுங்கள்....

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தைப்பொங்கல்  சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாள். அப்பொழுது புதிதாக அறுவடை செய்த அரிசி, வெல்லம், பாசிப் பருப்பு, போன்றவற்றை கொண்டு சர்க்கரைப் பொங்கல் செய்து சூரியனுக்கு நன்றி செலுத்தப்படுகிறது. அத்தகைய பொங்கல் செய்ய சில டிபஸ்...

1. சர்க்கரை பொங்கல் முற்காலத்தில் மண்பானையில் செய்யப்பட்டது, இப்பொழுது பித்தளை, அலுமினியம், சில்வர், போன்ற பானைகளில் செய்யது வருகின்றனர். மேலும் பிரஷர் குக்கரில் செய்து வருகின்றனர். இதில் செய்தாலும் சக்கரை பொங்கல் சுவை மாறாமல் இருக்க வேண்டும் அல்லவா...

2. சக்கரை பொங்கல் செய்ய, புது பச்சரிசி அல்லது பொங்கல் பச்சரிசி என கடைகளில் கிடைக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். இல்லையென்றால் பொன்னி பச்சரிசி பயன்படுத்தலாம்.

3. பொங்கல் செய்ய தரமான பழுப்பு நிற வெல்லத்தை பயன்படுத்தவும். மேலும் பொங்கல் செய்யும் பொழுது பச்சை கற்பூரம் சேர்ப்பது பொங்கலின் சுவையைக் கூட்டும்.

4. சிறிதளவு ஜாதிக்காய் பொடி சேர்த்து பொங்கல் செய்தால் சுவையும் மணமும் கூடும். இறுதியாக முந்திரி திராட்சையை வறுத்து சேர்த்த பிறகு கால் கப் அளவு கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

5. பச்சரிசி இல்லாதவர்கள் சாதம் வடிக்கும் அரிசியிலும் இதேபோல சக்கரை பொங்கல் செய்யலாம். சக்கரை பொங்கல் செய்யும் பொழுது வெல்லம் உங்கள் தேவைக்கு ஏற்ப கூடவோ அல்லது குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க... : சாஃப்ட் சப்பாத்தி செய்யும் ரகசியம் இதுதான்!

6. சக்கரை பொங்கல் பரிமாறும் பொழுது அதன் மேலே 1 தேக்கரண்டி நெய் சேர்த்து பரிமாறினால் அலாதியான சுவையாக இருக்கும்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Food, Pongal, Pongal recipes