முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / அவல் பயன்படுத்தி நகெட்ஸ் செய்யலாமா..? மொறுமொறுப்பான ரெசிபி இதோ..!

அவல் பயன்படுத்தி நகெட்ஸ் செய்யலாமா..? மொறுமொறுப்பான ரெசிபி இதோ..!

Nuggets

Nuggets

வீட்டிலேயே போஹா நகெட்ஸ் செய்வது எப்படி?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூடான தேநீருடன் மொறு மொறுப்பான நகெட்ஸ் குளிர்காலத்தில் சிறந்த ஸ்னாக்ஸ் ஆகும். அவல், உருளைக்கிழங்கு, வெங்காயம், குடைமிளகாய், பட்டாணி மற்றும் ஒரு சில மசாலாப் பொருட்கள் இருந்தால் போதும் சுவையான போஹா நகெட்ஸ் -யை வீட்டிலேயே சில நிமிடங்களில் செய்துவிடலாம்.

வெறும் 2 டீஸ்பூன் எண்ணெய் இருந்தால் போதும் சூப்பரான நகெட்ஸ் செய்ய. நகெட்ஸ் மொறு மொறுப்பாக இருக்க அதை கார்ன்ஃப்ளார் மாவில் முக்கி எடுத்து பிரட் துகள்களில் பிரட்டி எடுத்தால் போதும்.

உங்களிடம் பிரட் தூள்கள் இல்லை என்றால், இந்த படிநிலையை தவிர்க்கலாம். நகெட்ஸில் சீஸ் சுவையை சேர்க்க, டீப் ப்ரை செய்வதற்கு முன் ஒரு சிறிய துண்டு பனீரை அதற்கு நடுவில் வைக்கவும். நகெட்களை டொமட்டோ கெட்ச்அப் மற்றும் புதினா சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்.

உங்கள் குடும்பத்தினரை உங்கள் சமையலால் கட்டிப்போட நினைத்தால் இந்த ரெசிபியை புக்மார்க் செய்யவும். ஒரு சூப்பரான மொறு மொறு போஹா நகெட்ஸ் எப்படி செய்யலாம் என இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் ( 8 போஹா நகெட்ஸ்) :

- 1 கப் அவல்

- 2 பெரிய வேகவைத்த உருளைக்கிழங்கு

- 1/2 வெங்காயம்

- 1/2 கேப்சிகம் (பச்சை மிளகு)

- 1/4 கப் வேகவைத்த பட்டாணி

- 2 தேக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி இலை

- 1/2 தேக்கரண்டி சீரக தூள்

- 1/2 தேக்கரண்டி ட்ரை மேங்கோ பவுடர்

- 1/4 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்

- 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள்

- 2 தேக்கரண்டி அரிசி மாவு

- தேவையான அளவு உப்பு

- 2 தேக்கரண்டி சோள மாவு (கார்ன்ஃப்ளார்)

- 4 தேக்கரண்டி பிரெட் துகள்கள்

- 2 தேக்கரண்டி வெர்ஜின் ஆலிவ் ஆயில்

செய்முறை :

படி 1 - அவலை நன்றாக கழுவி ஒரு நிமிடம் ஊற வைக்கவும். பின்னர், தண்ணீரை வடிகட்டி, வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

படி 2 - வேகவைத்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மசிக்கவும். அதனுடன் ஊறவைத்த போஹாவை சேர்த்து, உங்கள் கைகளால் நன்கு கலக்கவும்.

படி 3 - இப்போது, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பட்டாணி மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக கலக்கவும்.

படி 4 - இதையடுத்து, சீரகத் தூள், ட்ரை மேங்கோ பௌடர், வர மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும். பின்னர், அரிசி மாவையும் சேர்த்து உங்கள் கைகளைப் பயன்படுத்தி மாவை நன்றாக கலக்கவும்.

படி 5 - பிசைந்த மாவிலிருந்து சிறிய பகுதிகளை எடுத்து, உருளை அல்லது வட்ட வடிவத்தில் கைகளை கொண்டு உருட்டவும்.

படி 6 - கார்ன்ஃப்ளார் கலவை தயார் செய்ய ஒரு பாத்திரத்தில், 1/4 கப் தண்ணீருடன் கார்ன்ஃப்ளார் மாவை சேர்க்கவும். பாகு பதமாக நன்றாக கலக்கவும்.

படி 7 - நகட்களை கார்ன்ஃப்ளார் கலவையில் நன்றாக முக்கி எடுத்த பின்னர் பிரட் தூள்களில் பிரட்டி எடுக்கவும்.

படி 8 - இப்போது ஒரு கடாயில் 2 டீஸ்பூன் ஆலீவ் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். பிரட் தூள்களில் பிரட்டப்பட்ட நகட்யை கடாயில் வைத்து பொன்னிறமாக வறுக்கவும்.

படி 9 - உங்களின் போஹா நகெட்கள் இப்போது பரிமாற தயாராக உள்ளன. கெட்ச்அப் மற்றும் புதினா சட்னியுடன் இணைத்து பரிபாராவும்.

First published:

Tags: Evening Snacks, Food recipes