• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மழைகாலத்தில் இந்த விஷயங்களை கட்டாயம் தவிர்க்கவும்... பாதுகாப்பு டிப்ஸ்

மழைகாலத்தில் இந்த விஷயங்களை கட்டாயம் தவிர்க்கவும்... பாதுகாப்பு டிப்ஸ்

கோப்பு படம்

கோப்பு படம்

பெருமழைக் காலங்களில் நம்மை நாமே எப்படி காத்துக் கொள்ள வேண்டும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மழை, வெள்ள காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுத்திட 20 நொடிகள் முறையாக அடிக்கடி சோப்பு போட்டு கைகளை தேய்த்து கழுவ வேண்டியது அவசியமாகும்.

    குடிநீரை 10 முதல் 20 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து பின்னர் ஆற வைத்து பருக வேண்டும். சமைத்த உணவுகளை உடனடியாக சூடாக உண்ண வேண்டும்.

    பழைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொது கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களை பயன்படுத்த கூடாது. காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும், சுய சிகிச்சை செய்து கொள்ளக் கூடாது

    வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உப்பு சர்க்கரை கரைசல், நீர் ஆகாரங்களை அடிக்கடி பருக வேண்டும்.

    வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

    வீட்டில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து உடனடியாக அப்புறப்படுத்துவது அவசியம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: