இனிப்பான கம்பு பணியாரம் செய்வது எப்படி?

மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட இந்த இனிப்பான கம்பு பணியாரம் ஏற்றதாக இருக்கும்...

மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட இந்த இனிப்பான கம்பு பணியாரம் ஏற்றதாக இருக்கும்...

 • Share this:
  கம்பு சத்துமிகுந்ததும், ஆரோக்கியம் தரும் தானியமாகும். எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது... அத்தகைய இந்த கம்பில் சுவையான தித்திப்பான கம்பு பணியாரம் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க... 

  தேவையான பொருட்கள்

  கம்பு : 1 கப்

  உளுந்து : ½ கப்

  பச்சரிசி : 1 கப்

  எண்ணெய் : தேவையான அளவு

  வெல்லம் அல்லது கருப்பட்டி : தேவையான அளவு

  தேங்காய் துருவல் : 4 - 5 ஸ்பூன்

  மேலும் படிக்க... ஆலு மட்டர் கிரேவி செய்ய ரெசிபி...  செய்முறை

  உளுந்து, கம்பு , பச்சரிசி ஆகியவற்றை 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும். பின் அதனுடன் தேவையான வெல்லம் அல்லது கருப்பட்டி, தேங்காய் துருவல் சேர்த்து கலக்கவும். அதன் பின்னர் பணியார கல்லில் எண்ணெய் தேய்த்து மிதமான தீயில்  பணியார மாவினை ஊற்ற வேண்டும். பணியாரம் நன்றாக வேந்தவுடன் சூடாக இருக்கும் போதே வெல்லத்துருவல் தூவி விட வேண்டும். இப்போது சுவையான கம்பு பணியாரம் ரெடி....

  மேலும் படிக்க... செட்டிநாடு பால் பணியாரம் எப்படி செய்வது தெரியுமா?
  Published by:Vaijayanthi S
  First published: