உடலுக்கு ஊட்டம் அளிக்கும் பாசிப்பருப்பு புட்டு... இன்றே செய்து அசத்தீடுங்க

பாசிப்பருப்பு, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை உடலுக்கு பல்வேறு வகையில் ஊட்டம் அளிக்கின்றது.

உடலுக்கு ஊட்டம் அளிக்கும் பாசிப்பருப்பு புட்டு... இன்றே செய்து அசத்தீடுங்க
பாசிப்பருப்பு புட்டு
 • Share this:
பாசிப் பருப்பில் எப்படி புட்டு சமைப்பது என்பதை தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள் : • பாசிப்பருப்பு - ஒரு கப்

 • வெல்லத்தூள் - முக்கால் கப்

 • முந்திரி - 30 கிராம்
 • நெய் - 2 டேபிள் ஸ்பூன்

 • ஏலக்காய் தூள் , ஜாதிக்காய் தூள் - தலா கால் டீஸ்பூன்

 • உப்பு - அரை டீஸ்பூன்
 

செய்முறை :

 • பாசிப்பருப்பை லேசாக வறுத்துக்கொள்ளவும்.

 • நன்கு சூடு ஆறியதும் 2 மணிநேரம் ஊற வைக்கவேண்டும்.

 • இட்லிக்கு உளுந்து அரைப்பது போன்று நீர் சேர்த்து பொங்க அரைக்கவும்

 • உப்பு சேர்த்து இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக விடவும்.

 • கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டு நன்றாக உதிர்த்து வைக்கவும்

 • அரை கப் நீரில் வெல்லம் போட்டு சூடாக்கி கரைந்ததும் வடிகட்டவும்

 • பின்னர் அடுப்பில் வைத்து கெட்டிப்பாகு செய்து உதிர்த்த பாசிப்பருப்பு இட்லியை நெய் , தேங்காய் துருவல் , ஏலக்காய் தூள் , ஜாதிக்காய் தூள் , சேர்த்து நன்றாக கலக்கவும்.

 • நெய்யில் முந்திரி வறுத்து இறுதியாக சேர்த்துக்கொள்ளவும். மிகவும் எளிதாக சுவையான உடலுக்கு ஆற்றல் அளிக்கக்கூடிய பாசிப்பருப்பு புட்டு ரெடி.. சுவையான மாலை நேர உணவாகவும் செய்யலாம். குழந்தைகள் விரும்பி உண்பர்.


ALSO READ :  நார்ச்சத்து நிறைந்த வாழைப்பூ துவையல் - எப்படி செய்வது..?
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading