Home /News /lifestyle /

பருப்பு பொடி இந்த மாதிரி ரெடி பண்ணி வச்சிக்கோங்க.. அவ்வளவு சீக்கிரமா கெட்டு போகாது!

பருப்பு பொடி இந்த மாதிரி ரெடி பண்ணி வச்சிக்கோங்க.. அவ்வளவு சீக்கிரமா கெட்டு போகாது!

பருப்பு பொடி

பருப்பு பொடி

டிபனுக்கு மட்டுமில்லை சாதத்தில் கூட பருப்பு பொடி தூவி நெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்

    பருப்பு பொடி கண்டிப்பாக எல்லோர் வீட்டு சமையல் அறையிலும் இருக்க வேண்டிய பொருள். அவசரத்திற்கு சட்னி அரைக்க முடியவில்லை என்றால் கவலையே வேண்டாம். கொஞ்சம் பருப்பு பொடியில் நல்லெண்ய் ஊற்றி வைத்துக் கொண்டு சாப்பிட்டால் போதும். இட்லி, தோசை ஈஸியா இறங்கும். வெறும் டிபனுக்கு மட்டுமில்லை சாதத்தில் கூட பருப்பு பொடி தூவி நெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். கண்டிப்பாக வீட்டில் பருப்பு பொடியை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    இதில் பலரும் சிரமமாக பார்ப்பது ஒன்று தான். அதாவது பருப்பு பொடி அரைத்து வைத்தால் சீக்கிரத்தில் கெட்டு போகிறது என பலரும் நினைக்கிறார்கள். உண்மை தான், அதுவும் வெயில் காலத்தில் அடிக்கடி பயன்படுத்திவிட்டு மூடி வைத்தால் கெட்டு போகக்கூடும். இந்த நேரத்தில் தான் இந்த ட்ரிக்கை பயன்படுத்த வேண்டும். அதாவது எண்ணெய் சேர்க்காமல் பருப்பு பொடியை அரைத்துக் கொள்ள வேண்டும். அதுக்குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

    உங்கள் எடையை குறைக்க சமையல் அறை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ்களே போதுமானது

    பிரபல குக்கிங் யூடியூப் சேனலான அம்மா சமையல் வீடியோவில் இந்த ரெசிபி வெளியிடப்பட்டுள்ளது.. வாருங்கள் இப்போது செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    துவரம் பருப்பு, பூண்டு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு, பொட்டுக்கடலை

    செய்முறை:

    1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் பூண்டு சேர்த்து வெறுமையாக வறுத்து கொள்ள வேண்டும்.

    சைவ முட்டை பொரியல்.. ஒருமுறை செய்து பாருங்கள் கட்டாயம் பிடிக்கும்!

    2. பின்பு அதே கடாயில் துவரம் பருப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.

    3. இப்போது மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.



    4. கடைசியாக சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    5. பின்பு மிக்சியில் வறுத்த பூண்டு, அதனுடன் வறுத்த பருப்புகளை சேர்த்து ஒரு கைபிடி அளவு பொட்டுக்கடலையும் சேர்க்க வேண்டும்.

    6. அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்தால் சூப்பரான பருப்பு பொடி தயார் அதுவும் இந்த பருப்பு பொடி சீக்கிரத்தில் கெட்டு போகாது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Breakfast, Food items, Food recipes

    அடுத்த செய்தி