Home /News /lifestyle /

ஆந்திரா ஸ்டைல் பருப்பு குழம்பு.. ஒருமுறை செய்தால் அடிக்கடி செய்வீங்க!

ஆந்திரா ஸ்டைல் பருப்பு குழம்பு.. ஒருமுறை செய்தால் அடிக்கடி செய்வீங்க!

பருப்பு குழம்பு

பருப்பு குழம்பு

இந்த பருப்பு குழம்பை இட்லி, தோசைக்கும் வைத்து சாப்பிடலாம் சுட சுட சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.

    ஆந்திரா ஸ்டைல் உணவு என்றாலே அதில் சற்று காரம் தூக்கலாக இருக்கும். அவர்கள் செய்யும் பிரியாணி தொடங்கி, சட்னி வகைகள், குழம்பு வகைகள், துவையல் வகைகள் என காரம் தூக்கலாக இருப்பதே அவர்களின் ஸ்பெஷாலிட்டி. அவர்கள் அரைக்கும் பருப்பு பொடி கூட மிளகாய் நிறத்தில் தான் இருக்கும். சென்னைவாசிகள் தொடங்கி பலரும் ஆந்திரா உணவுகளை விரும்பி ருசிப்பார்கள். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு காரம் சற்று தூக்கலாக இருக்கும் நான் வெஜ் உணவுகள் எப்பவுமே ஃபேவரெட் தன். அந்த வகையில் இந்த பதிவில் பார்க்க போவது ஆந்திரா ஸ்டைல் பருப்பு குழம்பு.

    நம்ம ஊரில் இதை ஒருவகை சாம்பார் என்பார்கள். ஆனால் அவர்கள் இதை பருப்பு குழம்பு என்றே அழைப்பார்கள். இந்த குழம்பை இட்லி, தோசைக்கும் வைத்து சாப்பிடலாம் சுட சுட சாதத்துடன் வைத்து சாப்பிடலாம். ஆந்திரா ஹோட்டல்களில் இந்த பருப்பு குழம்பு மீல்ஸுடன் பரிமாறப்படும். நீங்களும் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள். இந்த ரெசிபி வீடியோ தற்போதுகவிதா சமையலற என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. செய்முறை விவரம் இதோ.

    இதையும் படிங்க.. கல்யாண வீட்டு வத்தக்குழம்பு.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!

    தேவையான பொருட்கள்:

    துவரம் பருப்பு, தக்காளி , சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு, எண்ணெய், மஞ்சள் தூள், கடுகு, சீரகம்.

    செய்முறை:

    1. முதலில் குக்கரில் தேவையான அளவு பருப்புடன் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயம் , மிளகாய் தூள் சேர்த்து  தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும்.

    2. பருப்பு வெந்ததும் அதை மசித்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    3. இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

    இதையும் படிங்க..தக்காளியுடன் கொத்தமல்லி சேர்த்து சட்னி செய்து இருக்கீங்களா? அடுத்தமுறை ட்ரை பண்ணுங்க!

    4. அதனுடன் நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    5. இப்போது அதில் மசித்த பருப்பை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.



    6. இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் பருப்பு குழம்பு தயார்.

    குழந்தைகளுக்கு செய்யும் போது மட்டும் காரத்தை சற்று குறைத்து கொள்ளுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Breakfast, Food recipes, Lunch

    அடுத்த செய்தி