முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பப்பாளி பழம் அல்வா செஞ்சுருக்கீங்களா? ட்ரைப் பண்ணிப்பாருங்க...

பப்பாளி பழம் அல்வா செஞ்சுருக்கீங்களா? ட்ரைப் பண்ணிப்பாருங்க...

பப்பாளி பழம் அல்வா

பப்பாளி பழம் அல்வா

Papaya Halwa | வெயில் காலங்களில் பப்பாளி பழம் அதிகமாக கிடைக்கும்.. அதனை வைத்து இந்த மாதிரி அல்வா செஞ்சுப்பாருங்கள்... சூப்பராக இருக்கும்...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. தமனிகளில் கொலஸ்ட்ரால் உருவாவதை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி பெரிதும் உதவும்.

தேவையானப் பொருட்கள்:

பப்பாளி பழ துண்டுகள் - 3 கப்

சர்க்கரை - 3/4 கப்

நெய் - 4 தேக்கரண்டி

பால் - காய்ச்சியது 1/2 கப்

ஏலக்காய் தூள் - சிறிதளவு

முந்திரி - 7

பாதாம் பருப்பு - 7

பப்பாளி

செய்முறை:

1. முதலில் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள்.

2. அதிகம் பழுத்த பழமாக இல்லாமல் சற்று காய் பதத்தில் எடுத்து கொள்ளவும். பாதாம், முந்திரி பருப்புகளை மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

Also see... கரம் மசாலா பொடி செய்ய ரெசிபி...

3. அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி போட்டு வதக்குங்கள்.

4. பச்சை வாடை போனதும் காய்ச்சிய பாலை ஊற்றி நன்கு வேக விடவும். பப்பாளி நன்கு குழைந்து வரும் அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும். அல்வா சுண்டி வரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவிடவும்.

5. பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொழுது முந்திரி, பாதாம், ஏலக்காய் தூள் தூவி கிளறி இறக்கவும். இப்போது சுவையான பப்பாளி அல்வா ரெடி.

First published:

Tags: Papaya