ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இப்படியொரு ஐதராபாத் ஸ்வீட்டை வீட்ல ட்ரை பண்ணி இருக்கீங்களா? வேற லெவல் டேஸ்ட்!

இப்படியொரு ஐதராபாத் ஸ்வீட்டை வீட்ல ட்ரை பண்ணி இருக்கீங்களா? வேற லெவல் டேஸ்ட்!

ஐதராபாத் ஸ்வீட்

ஐதராபாத் ஸ்வீட்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஐதராபாத் ஸ்வீட் ஷாஹி துக்ரா பற்றிய அறிமுகமே தேவையில்லை. ஐதராபாத் சென்ற அனைவருக்கும் தெரியும் அந்த ஊருக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயம் இந்த ஸ்வீட்டை ருசிக்காமல் செல்ல மாட்டார்கள். அதுமட்டுமில்லை ஷாஹி என்ற பெயரில் பல வெரைட்டியில் இந்த ஸ்வீட் கிடைக்கும். இந்த ஸ்வீட்டை செய்ய மொத்தமாக 15 நிமிடம் போதும் . எல்லா விஷேசத்திற்கும் பாயாசம், அல்வா, கேசரி ரெசிப்பிக்களை செய்து இருப்பீர்கள். ஒரு சின்ன மாற்றமாக ஒருமுறை இந்த ஐதராபாத் ஸ்வீட்டான ஷாஹி துக்ராவை ட்ரை பண்ணி பாருங்கள்.

  வீட்டில் செய்தால் கட்டாயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பிரபல யூடியூப் சேனலான பாப்பாஸ் கிச்சன் சேனல் வீடியோவாக வெளியிட்டுள்ளது.. இதுவரை இந்த சேனலில் பலவகையான ரெசிப்பிகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த ரெசிப்பக்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. அந்த வரிசையில் இந்த ஐதராபாத் ஸ்வீட்டான ஷாஹி துக்ராவும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  தேவையான பொருட்கள்:

  பால், பிரட் துண்டுகள், பாதாம், முந்திரி, குங்குமப்பூ, எண்ணெய், சர்க்கரை.

  இதையும் படிங்க.. சுஜா வருணி சொல்லி தந்த ஆந்திரா சிக்கன் பச்சடி ரெசிபி.. ஒருமுறை நீங்களும் செஞ்சி தான் பாருங்களேன்!

  செய்முறை:

  1. முதலில் 1 லிட்டர் பாலை பாத்திரத்தில் திக்காக காய்ச்ச வேண்டும். சிறிது பாலை எடுத்து அதில் குங்குமப்பூவை கரைத்து கொள்ள வேண்டும்.

  2. 1 லிட்டர் பால் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு கொதித்த பின்பு அதில் 1கப் சர்க்கரை சேர்த்து, அதில் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூ சேர்க்க வேண்டும்.

  3. இப்போது நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா நட்ஸ்களை  அதில் சேர்க்க வேண்டும். திக்கான பாலை தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

  ' isDesktop="true" id="694711" youtubeid="JcJaYg4xLYc" category="food">

  4.  பிரட் துண்டுகளை எண்ணெய்யில் பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். இப்போது தனியாக சர்க்கரை பாகு தயார் செய்து கொண்டு அதில் பொரித்த பிரட் துண்டுகளை சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

  5.  . இப்போது அந்த பிரட் துண்டுகள் மீது திக்கான பால் கரைசலை ஊற்றி ஊற வைத்து, அதன் மேல் நட்ஸ்களை தூவி பரிமாறினால் சூப்பரான ஐதராபாத் ஸ்வீட் ஷாஹி துக்ரா ரெடி.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Food recipes, Sweet recipes