பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா ரோலில் நடிக்கும் ஹேமா ராஜ்குமார் தக்காளி ஊறுகாய் போட்ட வீடியோ தான் இன்றைய ரெசிபி டைம்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா ரோலில் நடிப்பவர் நடிகை ஹேமா. சின்னத்திரையில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஹேமா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் மட்டும் தான். ஆனாலும் அவர் பயங்கர பிஸி. ஒரு பக்கம் சீரியல் ஆக்டிங் மறுபக்கம் யூடியூப் வீடியோ என பறந்து கொண்டிருக்கிறார். கொரோனா காலத்தில் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கிய ஹேமா ஷூட்டிங் போகமல் வீட்டில் இருக்கும் நேரத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் நல்ல வருமானத்தையும் நீட்டுகிறார். ஹேமாவின் இந்த யூடியூப் சேனலில் அனைத்து விதமான வீடியோக்களையும் பார்க்கலாம்.
ஷாப்பிங், மேக்கப், டூர், லைவ் என வெரைட்டி வீடியோக்களை வெளியிட்டு அசத்துவார். ஆனால் சமையல் வீடியோக்களை மட்டும் அவ்வளவு எளிதில் பார்த்துவிட முடியாது. இதை ஹேமாவின் ரசிகர்கள் ஒருமுறை இன்ஸ்டா லைவில் ஹேமாவிடமே கேட்டுவிட்டனர். உங்களுக்கு சமைக்க தெரியாதா? அதனால் தான் சமையல் சம்மந்தமான வீடியோக்களை அப்லோட் செய்வதில்லை என கேட்க, இதனால் பொங்கி எழுந்த ஹேமா தனது ரசிகர்களுக்கு தக்காளி ஊறுகாய் செய்து பதில் சொல்லி இருக்கிறார். இல்லை இல்லை சமைக்க தெரியும் என்பதை நிரூப்பித்திருக்கிறார். அவர் செய்த ஸ்பெஷல் ஊறுகாய் ரெசிபி இதோ..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதலில் அதற்கு தேவையான பொருட்களை பார்ப்போம். தக்காளி, நல்லெண்ணெய், வெந்தயம், உப்பு,புளி, தனி மிளகாய் தூள். இதில் தக்காளியை கட் செய்து அதில் இருக்கும் விதையெல்லாம் நீக்கி விட வேண்டும். அப்போது தான் ஊறுகாய் கெட்டு போகாமல் நீண்ட நாள் வருமாம். இப்போது அதன் செய்முறை. முதலில் தவாவில் வெந்தயத்தை போட்டு வறுத்து அதை பொடியாக்கி கொள்ள வேண்டும். பின்பு அதே தவாவில் நல்லெண்ய் ஊற்றி காய்ந்ததும் தக்காளி சேர்த்து என்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும். பின்பு புளியை சேர்த்து வதக்க வேண்டும்.
இரண்டு ஒரு சேர கலந்ததும் அதில் தேவையான அளவு மீண்டும் நல்லெண்ய் ஊற்றி அதில் மிளகாய் தூள், வெந்தய பொடி, உப்பு சேர்த்து 20 நிமிடம் அடிப்பிடிக்காமல் வேக வைக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து ஊறுகாய் பதத்திற்கு வந்தவுடன் இறக்கி ஆற வைத்து சாப்பிட்டால் சுவையான தக்காளி ஊறுகாய் ரெடி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food recipes