• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் கிச்சனில் தனத்தின் நிஜ கணவர்.. செட்டிநாடு மட்டன் சாப்பிட வந்தாராம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் கிச்சனில் தனத்தின் நிஜ கணவர்.. செட்டிநாடு மட்டன் சாப்பிட வந்தாராம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

முதன்முறையாக சுஜிதாவாக, தனது கணவர் தனபாலுடன் சேர்ந்த்து மட்டன் குருமா சமைத்தார்

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் தனம், செட்டிநாடு ஸ்டைலில் செய்த செட்டிநாடு மட்டன் குருமா தான் இன்றைய ஸ்பெஷல் ரெசிபி.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சுஜித்ரா, சமையலில் கைத்தேர்ந்தவர். இதற்கு முன்பு சுஜி பல படங்களில், சீரியல்களில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அவருக்கு வேற லெவலில் பெயர் வாங்கி தந்துள்ளது. சுஜிதாவின் பெயரே மறந்து இப்போது பெரும்பாலும் தனம் அண்ணி என்றே அழைக்கப்படுகிறார். இந்நிலையில், கொரோனா லாக்டவுனில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தனியாக யூடியூப் சேனல் தொடங்கினர். அதில் சுஜிதாவும் ஒருவர்.

    ஆனால் பெரும்பாலான நடிகர் நடிகைகள் ஆங்கிலத்தில் அல்லது ஸ்டைலாக யூடியூப் சேனலுக்கு பெயர் வைக்கும் போது சுஜிதா ‘கதைகேளு கதைகேளு’ என வித்யாசமான பெயரில் சேனலை தொடங்கி வெற்றிக்கரமாக அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தனது கணவர் மற்றும் மகனுடன் குன்னக்குடி சென்ற சுஜிதா, சிறப்பு விலாகாக பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு சென்றார். அதாவது அன்றைய தினம் அந்த வீட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் இல்லை. அதனால் தனது குடும்பத்தினருடன் சென்றவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் கிச்சனில் சுஜிதாவாக சமைத்தார்.

    இதற்கு முன்பு எத்தனையோ முறை தனம் ரோலில் அவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் கிச்சனில் சமைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இன்று முதன்முறையாக சுஜிதாவாக, தனது கணவர் தனபாலுடன் சேர்ந்த்து அவர் மட்டன் குருமா சமைத்தார். செட்டிநாடு ஸ்பெஷலாக அவர் செய்த மட்டன் குருமா ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தேவையான பொருட்கள்: மட்டன், பாதாம், முந்திரி, மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், தக்காளி, கரம் மசாலா பொருட்கள், தேங்காய், காய்ந்த மிளகாய், கசகசா, மஞ்சள் தூள், தேங்காய் எண்ணெய், உப்பு, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பச்சை மிளகாய்

    முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இது செட்டிநாடு ஸ்பெஷல் என்பதால் கண்டிப்பாக சட்டியில் தான் சமைக்க வேண்டும். அடுப்பில் சட்டியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி முதலில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, மிளகு சேர்த்து வதங்கி எடுத்து கொள்ள வேண்டும். அதே போல் தேங்காய் உடன் கசகசா சேர்த்து வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.அதே சட்டியில் காய்ந்த மிளகாய், சீரகம், பொட்டுக்கடலை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்பு தனியாக பெரிய சட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி வழக்கம் போல் கசகசா பொருட்கள், சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி மட்டனை சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

    பின்பு முதலில் பாதாம் முந்திரி கலவையை மிக்சியில் அரைத்து அந்த பேஸ்டை குழம்பில் ஊற்ற வேண்டும். அடுத்தது காய்ந்த மிளகாய் கலவையை பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த தூளை தேவையான அளவு கொதிக்கும் குழம்பில் சேர்க்க வேண்டும். இறுதியாக தேங்காய் கரைசலை குழம்பில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கினால் கமகம செட்டிநாடு மட்டன் குழம்பு தயார்.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: