வெயில் காலம் தொடங்கினாலேகிராமப்புறங்களில் இந்த பானகத்தைதான் அருந்துவார்கள். அதுவும் தென் மாவட்டங்களில் இது பிரபலம். குறிப்பாக, கோயில் விழாக்களில் பால் குடம் சுமப்பது, காவடி எடுப்பது போன்ற கடுமையான நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கு மட்டுமன்றி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இது ஓர் உற்சாகப் பானம் என்றால் மிகையாகாது. அத்தகைய பானகத்தை எப்படி எளிமையாக செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..
தேவையான பொருட்கள்:
வெல்லம் - 2 கப்,
புளி - எலுமிச்சைப்பழ அளவு,
உப்பு - 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்,
எலுமிச்சைப்பழம் - 5,
தண்ணீர் - 6 லிட்டர்,
ஏலக்காய் - 6 (பொடிக்கவும்),
சுக்குத்தூள் - 6 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 3 டீஸ்பூன்,
அலங்கரிக்க புதினா இலை - சிறிது
செய்முறை
1. முதலில் வெல்லத்தையும் புளியையும் தனித்தனியே சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
2. இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து, இத்துடன் சுக்குத்தூள், மஞ்சள்தூள், ஏலக்காய்த்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
3. பின்பு எலுமிச்சைச்சாறு, புதினா இலைகள் சேர்த்து கலந்து அலங்கரித்து பரிமாறலாம். இப்போது பானகம் ரெடி...
4. இது வெயிலுக்கு நல்லது. உடலை குளுமையாக வைத்திருக்கும். கிராமங்களில் மக்கள் வயலுக்கு செல்லும் போது இந்த வெல்லம் போட்ட பானகம், நீர் மோர் இன்றி போக மாட்டார்கள். இது உடலை நீர்ரோட்டமாகவே வைத்திருக்கும். அதனால் சீக்கிரமாக கலைப்படைய மாட்டோம்.
5.இது ஆயுர்வேதத்தில் குளுக்கோஸுக்கு நிகரான ஒன்று என்பதோடு, ஏராளமான ஆரோக்கியப் பலன்களையும் தரக்கூடியது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy juice, Summer, Summer Heat