வெல்லம் - 2 கப்,
புளி - எலுமிச்சைப்பழ அளவு,
உப்பு - 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்,
எலுமிச்சைப்பழம் - 5,
தண்ணீர் - 6 லிட்டர்,
ஏலக்காய் - 6 (பொடிக்கவும்),
சுக்குத்தூள் - 6 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 3 டீஸ்பூன்,
அலங்கரிக்க புதினா இலை - சிறிது
செய்முறை
முதலில் வெல்லத்தையும் புளியையும் தனித்தனியே சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து, இத்துடன் சுக்குத்தூள், மஞ்சள்தூள், ஏலக்காய்த்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து கலக்கவும். பின்பு எலுமிச்சைச்சாறு, புதினா இலைகள் சேர்த்து கலந்து அலங்கரித்து பரிமாறலாம். இப்போது பானகம் ரெடி...