பாலக் எனப்படும் பசலை கீரையை வைத்து பிரியாணி செய்வது எப்படி என்ற ரெசிபியை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 கப்
பாலக் கீரை பொடியாக நறுக்கியது - 1 கட்டு
பச்சை பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
சக்கரை - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - 1 க்கு 3/4 கப்
தாளிக்க
நெய் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
சீரகம் - 3/4 டீஸ்பூன்
செய்முறை
1. முட்தலில் பஸ்மதி அரிசியை குறைந்தது 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
2 அதன் பிறகு பாலக் கீரையை நன்றாக சுத்தப்படுத்தி, பொடியாக நறுக்கவும்.
3. ஒரு சிறிய குக்கரில் நெய் ஊற்றி சூடானதும், அதில் பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், கடைசியாக சீரகம் சேர்க்கவும்.
4. அதன் பிறகு நீளவாக்கில் வெட்டிய வெங்காயம், கீரிய பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
5. இதில், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
6. அதன் பின்னர் அதில் நறுக்கிய பாலக் கீரை, சக்கரை சேர்த்து, நன்றாக சுருண்டு வரும் வரை வதக்கவும்.
7. இப்போது ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும். அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 1 க்கு 3/4 கப் தண்ணீர் சேர்த்து, கொதிக்க விட வேண்டும்.
8. கொதி வந்தவுடன் குக்கரைமூடி விட வேண்டும்.
9. இப்போது மிதமான தீயில் 2 விசில் வரை விட்டால் போமானது. சரியாக ஸ்ட்டீம் இறங்கியவுடன், மூடியை திறந்து நன்றாக கிளறிவிட வேண்டும். நெய் சேர்த்து கிளறினால் நல்ல மணமாக இருக்கும். இப்போது பாலக்கீரையில் செய்த பாலக் பீஸ் பிரியாணி ரெடி.
10. இதில் விருப்பப்பட்டால் இதர காய்களையும் சேர்த்து செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.