ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மோமோஸ் பிரியரா நீங்கள்..? கண்டிப்பா இதை ட்ரை பண்ணூங்க..! பாலக் அட்டா மோமோஸ்..

மோமோஸ் பிரியரா நீங்கள்..? கண்டிப்பா இதை ட்ரை பண்ணூங்க..! பாலக் அட்டா மோமோஸ்..

மோமோஸ் ரெசிபி

மோமோஸ் ரெசிபி

பாலக் அட்டா மோமோஸ் நீங்கள் நினைப்பதை விடவும் சுவையாகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும். இதை மயோனைஸ் அல்லது மிளகாய் சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் அற்புதமான சுவையை பெறுவீர்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பலவித ஸ்னாக்ஸ் வகைகள் இருந்தாலும் சமீப காலமாக மோமோஸ் என்கிற ஸ்னாக்ஸ் வகை மிகவும் பிரபலமாகி வருகிறது. உலகில் உள்ள பலதரப்பு மக்களுக்கும் மோமோஸ் மிக பிடித்தமான உணவாகவும் மாறியுள்ளது. மென்மையான மற்றும் ருசியான வெளிப்புற வடிவத்தை கொண்ட மோமோஸ் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் சுவையை கொண்டதாக இருக்கிறது. மேலும், இதன் உள்ளே வைக்கப்படும் ஸ்டப்பிங்கும் மிகவும் அற்புதமானதாக இருக்கும்.

பல்வேறு வகையான மோமோஸ் இருக்கின்றன. ஆனால், அவற்றில் சில மட்டுமே அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அவற்றில் ஒரு மோமோஸ் பற்றி தான் இன்று பார்க்க போகிறோம். பாலக் அட்டா மோமோஸ் நீங்கள் நினைப்பதை விடவும் சுவையாகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும். இதை மயோனைஸ் அல்லது மிளகாய் சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் அற்புதமான சுவையை பெறுவீர்கள். இந்த பாலக் அட்டா மோமோஸ் செய்முறையை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
 
View this post on Instagram

 

A post shared by Sanjeev Kapoor (@sanjeevkapoor)தேவையான பொருட்கள்

1/2 கப் - பாலக்கீரை ப்யூரி

1 கப் - முழு கோதுமை மாவு

1/4 கப் - நறுக்கிய பச்சை குடைமிளகாய்

1/4 கப் - நறுக்கிய கேரட்

1/2 கப் - நறுக்கிய முட்டைக்கோஸ்

1 துண்டு - நறுக்கிய இஞ்சி

1/4 கப் - நறுக்கிய சிவப்பு கேப்சிகம்

1/4 கப் - வேகவைத்த மற்றும் நொறுக்கப்பட்ட ஸ்வீட் கார்ன்

1/4 கப் - அரைத்த பன்னீர்

தேவைக்கேற்ப - உப்பு

1/2 டீஸ்பூன் - சோயா சாஸ்

1 டீஸ்பூன் - சிவப்பு மிளகாய் சாஸ்

தேவைக்கேற்ப - கருப்பு மிளகுத்தூள்

2 டீஸ்பூன் - நறுக்கிய வெங்காயம் தாள்கள்

தேவைக்கேற்ப - மயோனைஸ், தக்காளி சட்னி

செய்முறை :

முதலில் முழு கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இதில் உப்பு, கீரை துருவல் மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாக பிசையவும். பிறகு ஈரமான மஸ்லின் துணியால் மூடி 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். அடுத்தாக, ஒரு பாத்திரத்தில் பச்சை குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ், இஞ்சி, சிவப்பு குடைமிளகாய், ஸ்வீட் கார்ன், பன்னீர், உப்பு, சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தேவைக்கேற்ப கருப்பு மிளகுத்தூள் மற்றும் வெங்காய தாள்கள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

Read More : வயிறு சரியில்லாத நாட்களில் இந்த BRAT டயட் ஃபாலோ பண்ணுங்க... மருத்துவர்களின் பரிந்துரை..!

 அடுத்து மோமோஸ் தயாரிக்க வைத்திருந்த மாவை எடுத்துக்கொண்டு, அதன் மேற்பரப்பில் சிறிது மாவை தூவி பெரிதாக உருட்டவும். பிறகு மீடியம் அளவிலான குக்கீ கட்டரைப் பயன்படுத்தி, அதிலிருந்து டிஸ்க்குகளை வெட்டுங்கள். இதில் ஒரு ஸ்பூன் காய்கறி கலவையை நடுவில் வைத்து மோமோஸாக வடிவமைப்பு செய்யவும். ஒரு ஸ்டீமரில் போதுமான அளவு தண்ணீரை சூடாக்கி, சில முட்டைக்கோஸ் இலைகளை ஸ்டீமரின் அடிப்பகுதியில் வைத்து, தயாரிக்கப்பட்ட மோமோஸை அதில் வைக்கவும். 8-10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்தால் போதுமானது. அவ்வளவு தான் சுவையான பாலக் அட்டா மோமோஸ் தயாராகி விடும். இதை மயோனைஸ் மற்றும் தக்காளி சட்னியுடன் சூடாக பரிமாறலாம்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Momos, Momos chutney