நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கீரை மிகவும் சிறந்தது. ஏனெனில் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க உதவுகிறது. அத்தக்கைய இந்த பாலக் கீரையில் பிரியாணி செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ
பெரிய கட்டு பாலக் கீரை - 1
பெரிய வெங்காயம் - 4
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
கேரட் - 2
பீன்ஸ் - 10
பச்சை பட்டாணி -100கிராம்
புதினா இலை சிறிதளவு
மல்லி இலை சிறிதளவு
பெரிய பட்டை - 1
லவங்கம் - 6
ஏலக்காய் - 2
பீரிஞ்ஜி இலை - 2
கப்தண்ணீர் - 4
தேவையான அளவு உப்பு
சிறிதளவு எலுமிச்சை சாறு
எண்ணெய் -5ஸ்பூன்
பாலக் கீரை
செய்முறை
1. முதலில் வெங்காயம் மற்றும் பீன்ஸ் நிளவாக்கில் நறுக்கவும்.கேரட் வட்டமாக நறுக்கவும்.பாலக் கீரை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வடித்து 4கப் அளவில் எடுத்து கொள்ளவும்.
2. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்ஜீ இலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
3. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடத்திற்கு வதக்கவும். அத்துடன் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, புதினா இலை மற்றும் மல்லி இலையை சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
4. வதங்கிய பிறகு பாலக் கீரை தண்ணீர், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு அரிசியை சேர்த்து 3விசில் வந்ததுடன் இறக்கினால் பாலக் பிரியாணி ரெடி...
குறிப்பு: கீரை பிடிக்கும் என்பவர்கள் இந்த பாலக் கீரையை அரைக்காமல் அப்படியே போட்டு பிரியாணியை செய்யலாம்...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.