உடலை வலுப்படுத்தும் சித்தூர் பாலக் சிக்கன்... இதோ ரெசிபி...

சித்தூர் பாலக் சிக்கன்

சிக்கனில் ஜிங்க் அதிகம் உள்ளதால், அது சரியான நேரத்தில் பசியை உண்டாக்கும். மேலும் இதனை சூப் செய்து குடித்தால் மிகவும் நல்லது.

  • Share this:
பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதியளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும். இத்தகைய பாலக் கீரையுடன் சிக்கனை சேர்த்து சமைத்தால் குழந்தைகளும் விரும்பி 

தேவையான பொருட்கள்:

சிக்கன் - கால் கிலோ

பெரிய தக்காளி - ஒன்று

எண்ணெய் - ஒரு மேஜைக் கரண்டி

கெட்டி தயிர் - 200 கிராம்

பச்சை மிளகாய் - நான்கு

இஞ்சி, பூண்டு விழுது - 20 கிராம்

பாலக்கீரை - ஒரு கட்டு

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - ஒன்று

உப்பு - தேவையான அளவு



செய்முறை:

சிக்கனை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பாலக்கீரை, வெங்காயம், தக்காளி ஆகிய அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்தவுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு லேசாக வதக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தையும் உடன் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பாலக் கீரையையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதன் பின்னர் சிக்கனை போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
இப்போது தயிரையும் சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கரம் மசாலா, உப்பு ஆகிய இவற்றையும் சேர்க்கவும். மேற்கொண்டு தண்ணீர் சேர்த்து நன்றாகவேக வைக்க வேண்டும். இதோ சுவையான சித்தூர் பாலக் சிக்கன் தயார்.
Published by:Vaijayanthi S
First published: