முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சத்து நிறைந்த பச்சை பயறு தோசை செய்ய ரெசிபி..!

சத்து நிறைந்த பச்சை பயறு தோசை செய்ய ரெசிபி..!

பச்சை பயிறு தோசை

பச்சை பயிறு தோசை

Dosa Recipe | குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை இப்படி ருசியாக செய்து கொடுக்கும் போது நிச்சயமாக அவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதன்மூலம் அவர்களுக்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பச்சை பயிறு வைத்து ஆரோக்கியமான மொறு மொறு தோசை ரெசிபியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

பச்சை பச்சை பயறு – ஒரு கப்

அரிசி -2 டேபிள்ஸ்பூன்

தண்ணீர் – 3 கப்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி – ஒரு துண்டு

பச்சை மிளகாய் – 2

பொட்டுக்கடலை – 1 ஸ்பூன்

கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி

உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. முதலில் பாசிப்பயறை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொண்டு அதனுடன் அரிசி இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

2. குறைந்தது 8 மணி நேரம் இந்த பச்சை பயிறு தண்ணீரில் ஊறி இருக்க வேண்டும். எனவே முந்தைய நாள் இரவே நீங்கள் ஊற வைத்து விட்டால் மறுநாள் காலையில்  அரைத்து சூப்பரான மொறுமொறு பச்சை பயறு தோசை சுட்டு சாப்பிடலாம்.

3. மறுநாள் காலையில் அந்த தண்ணீரில் இருந்து அரிசியுடன் கூடிய பச்சைப் பயறை மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் இஞ்சி, 2 பச்சை மிளகாய், பொட்டுக் கடலை, சீரகம், மல்லி தழை, சேர்த்து  தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

4. மாவிலிருந்து ஒரு கரண்டி எடுத்து மெல்லியதாக தோசை வார்த்தால் மொறுமொறுவென பச்சை பயறு தோசை மணக்க மணக்க ரெடியாகிவிடும்..

Also see... மகா சிவராத்திரி 2023: சிவனுக்கு நிவேதனமாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயாசம் செஞ்சுபாருங்கள்...

குறிப்பு: நீங்கள் எடுக்கும் அரிசி இட்லி அரிசி, புழுங்கல் அரிசி, பச்சரிசி, ரேஷன் அரிசி என்று எந்த அரிசியை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

First published:

Tags: Dosa