ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பாரம்பரிய பாட்டி சமையல்... நாவூறும் நாட்டுக்காய் கூட்டு... எளிதில் செய்ய ரெசிபி..!

பாரம்பரிய பாட்டி சமையல்... நாவூறும் நாட்டுக்காய் கூட்டு... எளிதில் செய்ய ரெசிபி..!

நாட்டுக்காய் கூட்டு

நாட்டுக்காய் கூட்டு

நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி சமைப்பது தற்போதைய காலகட்டதில் குறைந்து விட்டது. இந்த நாட்டுக்காய் கூட்டு சுவையாய் இருப்பது மட்டுமல்லாது மிகுந்த சத்துடையதாகும்.!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

என்னதான் விதவிதமாக கடைகளில் பீட்சா, பர்கர் என சாப்பிட்டாலும், வீட்டு சாப்பாடு என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். அதுவும் அம்மா சமையலை விட பாட்டி சமையல் என்பது அனைவருக்கும் ஸ்பெஷல் ஆன ஒன்று. காரணம் அவர்கள் சமைக்கும் விதமே வேறுமாதிரி இருக்கும். மேலும் தற்போது இருக்கும் காலகட்டத்தில் மசாலாக்களிலிருந்து அனைத்துமே ரெடிமேடாக கிடைக்கின்றன.

ஆனால் அந்த காலத்தில் மிளகாய்த் தூளிலிருந்து, சாம்பார் பொடி வரை அனைத்தையுமே வீட்டிலேயே கைப்பட அரைத்து உபயோகப் படுத்துவார்கள். அப்படி இருக்கையில் அவர்களின் சமையல் சுவை மேம்பட்டே இருக்கும்.

அதுபோலத்தான் நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி சமைப்பது தற்போதைய காலகட்டதில் குறைந்து விட்டது. இந்த நாட்டுக்காய் கூட்டு சுவையாய் இருப்பது மட்டுமல்லாது மிகுந்த சத்துடையதாகும்.!

தேவையான பொருட்கள் :

அவரைக்காய்

முருங்கைக்காய்

கத்திரிக்காய்

பூசணிக்காய்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

கொத்தவரங்காய்

புடலங்காய்

மேற்கண்ட எல்லா காய்களையும் 2 அங்குல நீலவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். சுமார் 3/4 கிலோ காய்கறிகள் தேவை.

மசாலா அரைக்க :

உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

தனியா - 1 டேபிள் ஸ்பூன்

இலவங்கப் பட்டை - 2 சிறு துண்டுகள்

மிளகாய் - 6 அல்லது 7

பெருங்காயம் - சிறுதுண்டு

தேங்காய்த் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவலைத் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சிறிது எண்ணெயில் வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

புளித் தண்ணீர் - 2 கப்

உப்பு - தேவைக்கேற்ப

கடுகு - தாளிக்க

எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை :

எல்லாக் காய்களையும் உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக வைக்கவும். காய் பாதி வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை விடவும்.

காய் வெந்த உடன் அரைத்த மசாலாவைப் போடவும். காய்களையும் மசாலாவையும் நன்கு கலந்து விடவும். பிறகு 5 நிமிடம் வரை நன்கு வேக விடவும்.

இறுதியாக எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அவ்வளவுதான் நாட்டுக்காய் கூட்டு தயார். இதை மதிய உணவுக்கு  பதார்த்தமாக சாப்பிடலாம்...

First published:

Tags: South indian dishes, Vegetable