ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

2020-இல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணி.. அதிகம் தேடப்பட்டது வௌவால் சூப்.. zomato கணக்கெடுப்பு..

2020-இல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணி.. அதிகம் தேடப்பட்டது வௌவால் சூப்.. zomato கணக்கெடுப்பு..

பிரியாணி, வௌவால் சூப்

பிரியாணி, வௌவால் சூப்

ஒவ்வொரு வெஜ் பிரியாணிக்கு சமமாக ஆறு சிக்கன் பிரியாணி ஆர்டர்கள் செய்யப்பட்டதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கும் நகரம் டெல்லி தான்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

இந்த ஆண்டு மட்டும் சுமார் 1,988,094 பேர் வெஜ் பிரியாணி (Veg Biriyani) ஆர்டர் செய்ததாக 2020-ம் ஆண்டில் இந்தியாவின் உணவுப் பழக்கம் குறித்த சொமேட்டோ (zomato) கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு தொடங்கத்தில் இந்தியா முழுவதும் பரவிய கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாடு தழுவிய ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில், சொமேட்டோ (zomato) மற்றும் ஸ்விகி (Swiggy) போன்ற ஆன்லைன் உணவு விநியோக சேவைகள் சமைக்க விரும்பாத இந்தியர்களுக்கு ஒரு மீட்பாளர்களாக திகழ்ந்தனர்.

உண்மையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்த சில வாரங்களுக்குப் பிறகு ஆன்லைன் உணவு விநியோகம் எவ்வாறு அதிகரித்தது என்பதைப் பற்றி நியூஸ் 18 செய்தி வெளியிட்டது.

கடந்த மார்ச் 15ம் தேதி முதல் முதல் ஏப்ரல் 16ம் தேதி வரை, சொமேட்டோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 46.3 முதல் 41.7 வரை குறைந்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல ஸ்விகியிலும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 48.8 முதல் 42.4 வரை குறைந்ததாக கூறப்பட்டது.

மேலும், வைரஸ் காரணமாக முகக்கவசங்கள், சானிடைசர்கள், சமூக விலகல் போன்ற நடவடிக்கைகளுடன் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் விதித்திருந்தது. இதற்கு தீர்வு காண, ஸ்விகி மற்றும் சொமேட்டோ ஆகிய இரண்டு நிறுவனமும் தொடர்பு இல்லாத விநியோகம் போன்ற சேவைகளை அறிமுகப்படுத்தினர். தங்கள் ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்புப் பொருட்களை வழங்கினர். பின்னர் மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதிலும் ஈடுபட்டனர். இதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில், சொமேட்டோ எடுத்த புதிய கணக்கெடுப்பில், டெல்லி, பெங்களூரு மற்றும் புனேவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் மோமோக்கள் (momos) முதலிடம் பிடித்துள்ளது. இந்த மூன்று நகரங்களிலும் மொத்தமாக 2.5 மில்லியன் மோமோக்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கும் நகரம் டெல்லி தான். அதேபோல இந்தியாவில் 414 பேர் சொமேட்டோவில் வௌவால் சூப்பைத் (Bat Soup) தேடியதாக கூறப்படுகிறது. சீனாவின் வுஹானின் ஈரமான சந்தையில் கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவியது.

குறிப்பாக வெளவால்களிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக சந்தேகிக்கப்பட்டது. இந்த நிலையில், சூப் குறித்த தேடல்கள் இரண்டு உணவு டெலிவரி பயன்பாட்டிலும் அதிகம் காணப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 2020ம் ஆண்டில் மிக அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு "பிரியாணி" (Biriyani) என்றும் சொமேட்டோ நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு பிரியாணி ஆடர் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
View this post on Instagram

 

A post shared by zomato (@zomatoin)பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் சொமேட்டோவில் இதுவரை சுமார் 1,380 ஆர்டர்கள் செய்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது ஒவ்வொரு நாளும் 4 ஆர்டர்கள் செய்துள்ளார். அதேபோல சொமேட்டோவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆர்டரின் மதிப்பு ரூ.1,99,950 ஆகும். மிகச்சிறிய ஆர்டரின் மதிப்பு ரூ.10 ஆகும். இதே போன்ற ஆய்வுகள் பிரபலமான ஆன்லைன் விநியோக சேவையான ஸ்விகி மூலமும் செய்யப்பட்டன.

’கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் ஒரு விலங்கு வேட்டையாடப்பட்டது..’ ஆய்வு அளிக்கும் அதிர்ச்சிகள் இதோ..

அவர்களின் கணக்கெடுப்பில் ஒவ்வொரு விநாடிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரியாணி ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டில் சமைத்த உணவு 2020ம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட உணவுகளில் ஒன்றாக மாறியது எனவும் குறிப்பிட்டுள்ளது. இதுதவிர, சிக்கன் பிரியாணி( Chicken Biriyani) இந்திய மக்களால் மிகவும் விரும்பப்படும் உணவாக தனது இடத்தை மீண்டும் தக்கவைத்து கொண்டுள்ளது.

ஒவ்வொரு வெஜ் பிரியாணிக்கு சமமாக ஆறு சிக்கன் பிரியாணி ஆர்டர்கள் செய்யப்பட்டதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. ஸ்விகியின் வருடாந்திர 'StatEATstics' பகுப்பாய்வின் ஐந்தாவது பதிப்பின் தரவுகளின்படி, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பயனர்கள் சிக்கன் பிரியாணியில் ஆர்டர் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் வேலை முகவரிகளுடன் ஒப்பிடும்போது வீட்டு முகவரிகளுக்கு 5 மடங்கு அதிகமான ஆர்டர்களை நாங்கள் வழங்கியிருந்தாலும், அந்த எண்ணிக்கை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வீட்டு ஆடர்களுக்கு எதிராக 9 மடங்கு உயர்ந்துள்ளது" என்று குறிப்பிட்டிருந்தது. இதுதவிர வீட்டிலிருந்து வேலை செய்யும் பணியாளர்கள் அலுவலக கபசினோக்கள் (cappuccinos) மற்றும் மசாலா டீ (Masala Tea) ஆகியவற்றை குடிக்க முடியாமல் போனது. இதனால் பல லட்சம் கணக்கில் ஸ்விகி பயனர்கள் பல வகையான தேநீர் மற்றும் காபியை ஆர்டர் செய்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Bat soup, Biriyani, Swiggy, Zomato