Home /News /lifestyle /

அசத்தலான ஆனியன் சப்ஜி.. சப்பாத்தி , தோசைக்கு இதைவிட பெஸ்ட் காம்போ கிடையாது..!

அசத்தலான ஆனியன் சப்ஜி.. சப்பாத்தி , தோசைக்கு இதைவிட பெஸ்ட் காம்போ கிடையாது..!

சப்ஜி

சப்ஜி

தமிழ்நாட்டிலும் அனைத்து வகை உணவுகளையும் ருசி பார்க்க ஆர்வம் காட்டுவதால் இந்த சப்ஜியும் அவர்களுடைய ஃபேவரட் லிஸ்டில் உள்ளது.

சப்ஜி சைட்டிஷுகள் வட மாநிலங்களின் உணவு வகைகளாகும். தமிழ்நாட்டிலும் அனைத்து வகை உணவுகளையும் ருசி பார்க்க ஆர்வம் காட்டுவதால் இந்த சப்ஜியும் அவர்களுடைய ஃபேவரட் லிஸ்டில் உள்ளது. அந்த வகையில் வெங்காய சப்ஜி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 5
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - 1/2 துண்டு
எண்ணெய் - 4
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
சோம்பு - 1/2 tsp
கடுகு -1/2 tsp
சீரகம் - 1/2 tsp
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தே.அ



செய்முறை :

முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

அனைத்தும் தயார் நிலையில் வைத்ததும் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய வையுங்கள்.

காய்ந்ததும் கடுகு, சீரகம் , கறிவேப்பிலை , பச்சை மிளகாய் சேர்த்து தாளியுங்கள். பின் அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

5 நிமிடத்தில் தயாரிக்க கூடிய அசத்தலான 5 சாலட் வகைகள் இதோ...

நன்கு வதங்கியதும் வெங்காயத்தை சேர்த்து நன்கு பிரட்டி வதக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதில் தண்ணீர் ஊற்றக்கூடாது எண்ணெயிலேயே சுருங்க வதங்கி சுண்ட வேண்டும். 10 நிமிடங்களுக்கு சிறு தீயில் தட்டுப்போட்டு மூடிவிடுங்கள்.

நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் ஆனியன் சப்ஜி ரெசிபி..!

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Food recipes

அடுத்த செய்தி