ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இனி வெங்காய தோலை தூக்கிப் போடும் முன் ஒரு தடவ யோசிங்க.. அதுல அவ்வளவு நன்மைகள் இருக்கு..!

இனி வெங்காய தோலை தூக்கிப் போடும் முன் ஒரு தடவ யோசிங்க.. அதுல அவ்வளவு நன்மைகள் இருக்கு..!

வெங்காய தோல்

வெங்காய தோல்

ஆய்வின்படி, உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் கெட்ட கொலஸ்ட்ரால் அல்லது குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீனை மேம்படுத்தஃபிளாவனாய்டுகள் உதவுகின்றன. உடல் பருமன் கொண்டவர்கள் இதய நோய்க்கு ஆளாவதாக புள்ளி விவரங்கள், ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் உணவு முறையில் வெங்காயம் இல்லாத சமையலே கிடையாது. அப்படி சமையலுக்கு வெங்காயத்தை நறுக்கும் முன் தோலை நீக்கிவிட்டு உட்பகுதியை மட்டும் நறுக்கி சமைப்போம். அதை கழிவுகளாக குப்பையில் போட்டுவிடுவோம். ஆனால் அதிலும் பல நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதையும் சில தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர். அவை என்னென்ன பார்க்கலாம்.

தேநீர் அருந்தும் பழக்கமுள்ளவர்கள் வெங்காயத் தோலை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். இந்த டீயில் குறைந்த கலோரிகள் உள்ளன. அதிக கலோரி கொண்ட பானங்களுடன் ஒப்பிடும்போது வெங்காயத் தோலைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் அதிக நன்மை பயக்கும்.
வெங்காயத் தோல் பல ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். அவற்றில் வைட்டமின் ஏ உள்ளது. இது பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. அவை தோல் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகின்றன. 
வெங்காயத்தோல் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டிருப்பதால் தோல் பிரச்சனைகளுக்கு பலன் அளிக்கின்றன.
நீங்கள் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், வெங்காயத் தோல்கள் உங்களுக்கு நல்ல மருந்தாக இருக்கும். வெங்காயத் தோல்கள் ஃபிளாவனாய்டுகளின் வளமான மூலமாகும். ஃபிளாவனாய்டுகள் பாலிபினோலிக் கலவைகள் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தலாம்.
ஆய்வின்படி, உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் கெட்ட கொலஸ்ட்ரால் அல்லது குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீனை மேம்படுத்தஃபிளாவனாய்டுகள் உதவுகின்றன. உடல் பருமன் கொண்டவர்கள் இதய நோய்க்கு ஆளாவதாக புள்ளி விவரங்கள், ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஃபிளாவனாய்டு, குவெர்செடின் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஃபிளாவனாய்டு நல்ல கொலஸ்ட்ரால் அளவை பாதிக்காது.
வெங்காயத் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளை நீக்க உதவும். இது பருவகால நோய்த்தொற்றுகளின் அபாயத்தை தடுக்க உதவுகிறது.
Published by:Josephine Aarthy
First published:

Tags: Onion, Onion health benefits