• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • திருவோணம் ஸ்பெஷல் உணவு... அடை பிரதமன் செய்ய ரெசிபி....

திருவோணம் ஸ்பெஷல் உணவு... அடை பிரதமன் செய்ய ரெசிபி....

அடை பிரதமன்

அடை பிரதமன்

இன்று ஓணம் தினத்தை முன்னிட்டு, கேரள நாட்டு பாரம்பரிய உணவுகளில் ஒன்றான அடை பிரதமன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • Share this:
திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் நிகழ்ந்தது இந்த திருவோண நட்சத்திரத்தில் தான். அதனால் தான் ஒவ்வொரு ஆவணி மாதத்தில் வரும் திருவோண நடத்திரத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. திருவோணத்தின் ஸ்பெஷல் அடை பிரதமந்தான். அதனை மிக எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்:

அரிசி அடை - 50 கிராம்

வெல்லம் -120 கிராம்

நீர்த்த தேங்காய் பால் - 75 மிலி

கெட்டியான தேங்காய் பால் -100 மிலி

தேங்காய் துண்டுகள்- தேவையான அளவு

முந்திரி -  5 கிராம்

உலர்ந்த இஞ்சி தூள்- 3 கிராம்

ஏலக்காய் பொடி - 2 கிராம்

நெய் - தேவையான அளவு



செய்முறை:

அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

பின்னர் அரை கப் தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி, அதிலுள்ள கசடுகளை நீக்கவும். 2 தேக்கரண்டி நெய்யைச் சூடாக்கி, முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை வறுக்கவும்.
அதே பாத்திரத்தில், மேலும் சிறிது நெய்யை சூடாக்கி, அடையை மிதமான அல்லது குறைந்த தீயில் 4-&5 நிமிடங்கள் வறுக்கவும்.
இப்போது, வெல்லம் கரைத்த நீரை அடையில் சேர்த்து, மிதமான சூட்டில் அது கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.

மேலும் படிக்க... சுவையான ஈரோடு ஈரல் வதக்கல் ரெசிபி...

கெட்டியானவுடன், அதில் நீர்த்த தேங்காய் பாலைச் சேர்க்கவும். அது மீண்டும் கெட்டியாகும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க  வேண்டும். பிறகு, கெட்டியான தேங்காய் பால், வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய் துண்டுகளைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கிவிட்டதை உறுதி செய்த பிறகு, அடுப்பை அணைத்து விடலாம். இப்போது ருசியான அடை பிரதமன் ரெடி.

மேலும் படிக்க... சிக்கன் முட்டை சாப்ஸ் எப்படி செய்வது?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: