முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / 2 நிமிடத்தில் சூப்பரான சைடிஷ் ரெடி.. செஃப் தாமு சொல்லி தரும் சமையல் ரகசியம்!

2 நிமிடத்தில் சூப்பரான சைடிஷ் ரெடி.. செஃப் தாமு சொல்லி தரும் சமையல் ரகசியம்!

செஃப் தாமு

செஃப் தாமு

சாம்பார், ரசம், கார குழம்பு என எல்லாவிதமான உணவுகளுக்கும் பொருந்தக் கூடிய பெஸ்ட் சைடிஷ் முட்டை ஆம்லெட் தான்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பல சமயங்களில் நம் வீடுகளில் சாப்பாட்டுக்கு சைடிஷ் செய்ய சோம்பேறி தனமாக இருக்கிறது என நினைப்பவர்கள் உடனே கையில் எடுப்பது முட்டையை தான். ஒரு ஆம்லெட் போட்டு சாப்பிட்டால் போதும் எல்லா உணவும் ஈஸியாக இறங்கி விடும். சாம்பார், ரசம், கார குழம்பு என எல்லாவிதமான உணவுகளுக்கும் பொருந்தக் கூடிய பெஸ்ட் சைடிஷ் முட்டை ஆம்லெட் தான்.

இது அசைவம் சாப்பிடுபவர்களுக்கு ஒகே தான். அதுவே முட்டை சாப்பிடாத சுத்தமான வெஜிடேரியனாக இருந்தால் என்ன செய்வது? கவலை வேண்டாம் அந்த சமையல் ரகசியத்தை தான் செஃப் தாமு தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். இந்த வெஜிடேரியன் ஆம்லெட்டை சாப்பாட்டுக்கு சைடிஷாக சாப்பிட்டாலும் சரி, தோசையாக நினைத்து சாப்பிட்டாலும் சரி, மார்னிக் பிரேக் ஃபாஸ்ட்டாக சாப்பிடாலும் சரி சூப்பராக இருக்குமாம். வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லி, எண்ணெய், மிளகாய் தூள், பச்சை மிளகாய்

இதையும் படிங்க.. வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 7 இன்றியமையாத நன்மைகள்.! தகவல்களை பகிர்ந்த பிரபல மருத்துவர்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துக் கொண்டு அதில் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்.

' isDesktop="true" id="676751" youtubeid="vbB5GWZ32qg" category="food">

இப்போது தேவையான பதம், அதாவது தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கலந்து தோசை தவாவில் ஆம்லெட் போல் ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது சூப்பரான 2 நிமிடத்தில் செய்யக்கூடிய சைடிஷ் வெஜிடேரியன் ஆம்லெட் ரெடி.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Egg recipes, Food recipes