Home /News /lifestyle /

ஒமேகா 3 அல்லது ஒமேகா 6 கொழுப்பு அமிலம்… இரண்டில் எது சிறந்தது..?

ஒமேகா 3 அல்லது ஒமேகா 6 கொழுப்பு அமிலம்… இரண்டில் எது சிறந்தது..?

ஒமேகா 3 , ஒமேகா 6 கொழுப்பு அமிலம்

ஒமேகா 3 , ஒமேகா 6 கொழுப்பு அமிலம்

இந்த இரண்டு வகையான கொழுப்பு அமிலங்களும் உடலுக்கு தேவையானது தான். இவை மனித உடலால் நேரடியாக சிந்தசைஸ் செய்யப்படுவதில்லை.

நம் உணவில் கொழுப்பு எவ்வளவு முக்கியம், கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா, எந்த அளவுக்கு கொழுப்பு நல்லது என்பதைப் பற்றியெல்லாம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொழுப்பு அமிலங்கள் அதாவது ஃபேட்டி ஆசிட் எனப்படும் கொழுப்பு வகையும் உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து தான். ஆனால் ஒமேகா கொழுப்பு அமிலங்களில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 என்று இரண்டு வகை கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த இரண்டு வகையில் எந்த கொழுப்பு ஆரோக்கியமானது, எதை அதிகமாக சாப்பிட வேண்டும், என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் Vs ஒமேகா 6 கொழுப்பு அமிலம்

இந்த இரண்டு வகையான கொழுப்பு அமிலங்களும் உடலுக்கு தேவையானது தான். இவை மனித உடலால் நேரடியாக சிந்தசைஸ் செய்யப்படுவதில்லை. உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும், வளர்சிதை மாற்றத்துக்கும் இந்த கொழுப்பு அமிலங்கள் அவசியம். எனவே நீங்கள் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இருக்கும் உணவுகளைதஜ் தவிர்த்தால் அல்லது குறைவான கொழுப்பு கொண்ட உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால், உடலின் முக்கியமான செயல்களில் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்.



ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகளின் நன்மைகள்

தினமும் முட்டை மற்றும் கீரையை உணவில் சேர்க்க வேண்டும் என்று பொதுவாக கூறப்படுவதுண்டு. அதற்குக் காரணம், அதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகள் தான். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் உடலில் மற்றும் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியை குறைக்கும் தன்மை கொண்டது. சால்மன் மற்றும் மீன் உணவுகள், முட்டை, வால்நட் மற்றும் பச்சைக்கீரை வகைகளில் ஒமேகா கொழுப்பு நிறைந்துள்ளது.

உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் வெறும் வயிற்றில் முந்திரி சாப்பிடக் கூடாதாம்..! மீறினால் என்ன ஆகும்..?

ஒமேகா 6 கொழுப்பு அமில உணவுகளின் நன்மைகள்

ஒமேகா 6 கொழுப்பு அமிலம் உடலுக்குத் தேவை என்றாலும், அதிகப்படியாக சாப்பிடுவது உடலில் அழற்சியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. எண்ணெய் வகைகளில் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. சூரியகாந்தி எண்ணெய், மக்கா சோள எண்ணெய் கனோலா எண்ணெய் ஆகியவை ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள எண்ணெய் வகைகளாகும். அதுமட்டுமின்றி, இறைச்சி வகைகளான பன்றி இன்றைச்சி, கோழி இறைச்சி, மற்றும் பீஃப் ஆகியவற்றிலும் ஒமேகா-6 கொழுப்பு நிறைந்துள்ளது.

அதாவது எண்ணெய்யில் பொரித்த உணவுகள் மற்றும் இறைச்சிகளில் ஒமேகா 6 கொழுப்பு அதிகம் உள்ளது. இது உடலில், உடல் உறுப்புகளில் வீக்கத்தை உண்டாக்கும். எனவே, ஒமேகா 6 கொழுப்பு அமிலம் உணவுகளை குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். ஒமேகா 6 உணவுகளை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியக்கேடு விளைவிக்கும்.



ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 உணவுகளை சாப்பிடும் விகிதம்

ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு கொழுப்புகள் கொண்ட உணவுகளை நீங்கள் ஒன்றாக சாப்பிடும் பொழுது இரண்டுமே உடலுக்குள் செரிமானமாவதற்கு ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகிறது. எனவே நீங்கள் போதிய அளவு ஒமேகா-3 கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொண்டாலும், ஒமேகா 6 உணவுகளைச் சாப்பிடும்போது அவை எளிதாக செரிமானம் ஆகிவிடும். எனவே உங்களால் ஒமேகா 3 உணவுகளில் உள்ள anti-inflammatory நன்மைகளை பெற முடியாது.

இதனால் நீங்கள் ஒமேகா-3 அதிகம் இருக்கும் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது நன்மை அளிக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Omega 3, Omega 6

அடுத்த செய்தி