Home /News /lifestyle /

பிரசவத்திற்கு பின்னர் இந்த சூப் வகைகளை மறக்காம குடியுங்கள்... ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும்...

பிரசவத்திற்கு பின்னர் இந்த சூப் வகைகளை மறக்காம குடியுங்கள்... ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும்...

பிரசவத்திற்கு பின் குடிக்க வேண்டிய சூப் வகைகள்

பிரசவத்திற்கு பின் குடிக்க வேண்டிய சூப் வகைகள்

பிரசவத்திற்கு பின்னர் ஆரோக்கிய நிறைந்த உணவுகளை சாப்பிடுவதோடு, உடலுக்கு வலுவூட்டும் வகையிலான சூப்களைப் பருகுவது நல்லது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பிரசவத்தின் போது பெண்களுக்கு ஏராளமாக ரத்தம் வெளியேறுவதால் உடல் சோர்வடையும். எனவே ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்கு வைட்டமின்கள், மினரல்கள் அடங்கிய சூப்களைப் பருகுவது மிகவும் நல்லது என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

கர்ப்பம் தரிப்பது, குழந்தையை எவ்வித பாதிப்பும் இல்லாமல் பெற்றெடுப்பது ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையில் முக்கிய தருணங்களாகும். கர்ப்பமாகும் பெண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்க நேரிடுகிறது. இந்நேரங்களில் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ? அதற்கு மேல் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் பிரசவத்திற்குப் பிறகு தான்.

9 மாதங்களுக்குப் பிறகு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களின் உடலிருந்து ஏராளமான ரத்தம் வெளியாகும். இதுபோன்ற நேரங்களில் உடல் சோர்வடையும் என்பதால் ஆரோக்கியமாகவும் எவ்வித இடையூறும் இல்லாமல் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது அவசியமான ஒன்று. எனவே தான் பிரசவத்திற்கு பின்னர் ஆரோக்கிய நிறைந்த உணவுகளை சாப்பிடுவதோடு, உடலுக்கு வலுவூட்டும் வகையிலான சூப்களைப் பருகுவது நல்லது. பிரசவத்திற்கு பின்னதாக பெண்கள் சாப்பிட வேண்டிய சூப்கள் என்னென்ன? எப்படி உடல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்பது குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று..

 



பிரசவத்திற்கு பிறகு பெண்கள் சாப்பிட வேண்டிய சூப் வகைகள்:

கடற்பாசி சூப்:

பிரசவத்திற்கு பின்னர் குழந்தைக்கும், தாய்மார்களுக்கும் மிகவும் முக்கியமான சூப்களில் ஒன்று தான் கடற்பாசி சூப். இதில் கால்சியம், அயோடின், இரும்புச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு இதனை ஒவ்வொரு தாய்மார்களும் பருகும் போது, இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. அயோடின் நிறைந்திருப்பதால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. இதோடு குறைவான கலோரிகள் தான் உள்ளது என்பதால், வளர்சிதை மாற்றம், இரத்த ஓட்டம் மற்றும் சுத்திகரிப்பு, புற்றுநோய் எதிர்ப்பு போன்றவற்றிற்கு தீர்வாக அமைகிறது. பொதுவாக பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த கடற்பாசி சூப் கொரிய உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



மூலிகைகள் நிறைந்த தக்காளி சூப்:

குழந்தைப் பெற்ற பெண்களின் உடலுக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது தக்காளி சூப். தக்காளியுடன் துளசி, மஞ்சள், பூண்டு போன்றவற்றைச் சேர்ந்து சூப் செய்து பருகும் போது நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்கிறது. மேலும் இந்த மூலிகைகள் நிறைந்த தக்காளி சூப்பைப் பருகும் போது, கல்லீரலின் நச்சுத்தன்மை, அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பல்வேறு பண்புகளைக் கொண்டுள்ளதால் பெண்களின் உடலுக்கு வலுச்சேர்க்கிறது.



இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..? வைட்டமின் பி12 குறைபாடாக இருக்கலாம்... உடனே செக் பண்ணுங்க...

பச்சை பப்பாளி மீன் சூப்:

மீன் சூப், பப்பாளி சூப் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பச்சை பப்பாளி சூப் புதிதாக இருக்கிறது என்று நினைக்காதீர்கள் இது சீனா மற்றும் வியட்நாமில் பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடக்கூடிய பிரபலமான சூப். துருவிய கேரட்டுடன் பச்சைப் பப்பாளி, இஞ்சி, பூண்டு சேர்த்து செய்யும் சூப்களில் வைட்டமின்கள் ஏ, சி,ஈ மற்றும் கே உள்ளது. இவற்றுடன் பாலோட்டுகள், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவை நிறைந்துள்ளதால் பிரசவத்திற்கு பின்னர் பெண்களைப் பாதுகாக்க உதவியாக உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கவும், இரும்புச்சத்தையும் மேம்படுத்துகிறது.



கோழி சூப்:

பிரசவத்திற்கு பின்னர் பெண்களின் இனப்பெருக்க அமைப்பு குணமாவதற்கு 40 நாள்கள் எடுத்துக்கொள்ளும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். இந்த காலங்களில் பிரசவித்த பெண்களுக்கு சிக்கன் சூப் கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில் நோய் எதிர்ப்பு சக்திக்குரிய மசாலாக்களை சேர்க்கும் போது பெண்கள் உடல் வலுப்பெறும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Post pregnancy diet, Soup

அடுத்த செய்தி