• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஓட்ஸ் கொழுக்கட்டை ரெசிபி...

ஓட்ஸ் கொழுக்கட்டை ரெசிபி...

ஓட்ஸ் கொழுக்கட்டை

ஓட்ஸ் கொழுக்கட்டை

ஓட்ஸ் கொழுக்கட்டை செய்வது என்பதை பற்றி தெரிந்துக்கொளவோம் வாங்க...

  • Share this:
டயட்டில் இருப்போர் அதிகம் பயன்படுத்தும் ஒரு உணவுப் பொருள் தான் ஓட்ஸ். இந்த ஓட்ஸ் பலருக்கு பிடிக்காது. இதற்கு காரணம் அது பிசுபிசுவென்று இருப்பது தான். ஆனால் இந்த ஓட்ஸை பலவாறு சமைத்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? அதில் விநாயருக்கு மிகவும் பிடித்தமான பிடிக் கொழுக்கட்டையை செய்யலாம். வாங்க எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1 1/4 கப்

தண்ணீர் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

வரமிளகாய் - 2

ஓட்ஸ்


செய்முறை:

முதலில் ஓட்ஸை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, 3 நிமிடம் நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். நீரானது நன்கு கொதித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து 3 நிமிடம் நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

மேலும் படிக்க...மேலும் படிக்க... விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... பிள்ளையாருக்குப் பிடித்த பூரணம் கொழுக்கட்டை ரெசிபி..

பின்பு இட்லி தட்டில் மற்றும் கையில் எண்ணெயை தடவிக் கொண்டு, அதனை கொழுக்கட்டை போன்று பிடித்து இட்லி தட்டில் வைத்து, 5-7 நிமிடம் வேக வைத்து இறக்கினால் ஓட்ஸ் கொழுக்கட்டை ரெடி...

மேலும் படிக்க... விநாயகர் சதுர்த்திக்கு இந்த டயட் கொழுக்கட்டையை செஞ்சுபாருங்க..

மேலும் படிக்க... குழந்தைகளுக்கு பிடித்த பால் கொழுக்கட்டை... இதோ ரெசிபி...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: