முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஓட்ஸ் வெச்சு இப்படியெல்லாம் கூட சமைக்கலாமா? ஈசியான 3 ரெசிபிகள் உங்களுக்காக..!

ஓட்ஸ் வெச்சு இப்படியெல்லாம் கூட சமைக்கலாமா? ஈசியான 3 ரெசிபிகள் உங்களுக்காக..!

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ்- இல் உடலுக்குத் தேவையான தையமின், துத்தநாகம், மெக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

  • Last Updated :

உடல் எடையை குறைக்க விரும்புவோரின் பிரதான காலை உணவாக ஓட்ஸ் உள்ளது. இதில் உடலுக்குத் தேவையான தையமின், துத்தநாகம், மெக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் பீட்டா குளுகான் என்ற எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத்தக்க வகையிலான வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை அதிகரிக்கிறது.

ஓட்ஸ் ஒரு ஆரோக்கியமான உணவு தான், அதற்காக அதனை சுவையாக செய்து சாப்பிடக்கூடாது என்பது கிடையாது. முற்றிலும் வித்தியாசமான வகையில் ஓட்ஸை வைத்து தயார் செய்யக்கூடிய 3 ரெசிபிகளை உங்களுக்காக நாங்கள் கொண்டுவந்துள்ளோம்...

1. ஓட்ஸ் ஸ்மூத்தி:

கோடை காலத்திற்கு மட்டுமல்ல அனைத்து பருவ நிலையிலும் பருகக்கூடிய ஓட்ஸ் ஸ்மூத்தி இதோ...

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - ¼ கப்

வாழைப்பழம் - 1 ( நறுக்கப்பட்டது)

பாதாம் பால் - 1/2 கப்

பினட் பட்டர் - 1 டீஸ்பூன்

மேப்பிள் சிரப் அல்லது தேன் - ½ டீஸ்பூன்

வெண்ணிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்

பட்டை - ½ டீஸ்பூன்

உப்பு - சிறிதளவு

சில ஐஸ்கட்டிகள்

செய்முறை:

ஒரு பிளெண்டர் அல்லது மிக்ஸி ஜாடியில் ஓட்ஸ் சேர்த்து நன்றாக பவுடர் ஆகும் படி அறைக்கவும். அதனுடன் நறுக்கிவைக்கப்பட்ட வாழைப்பழ துண்டுகள், பால், பினட் பட்டர், மேப்பிள் சிரப், வெண்ணிலா எசன்ஸ், பட்டை தூள், சிட்டிகை அளவு உப்பு ஆகியன சேர்த்து, கிரீமியாக வரும் வரை அரைத்துக் கொள்ளவும். இத்துடன் சில துண்டு ஐஸ்கட்டிகளை போட்டால், ஓட்ஸ் ஸ்மூத்தி தயார்.

2. சாக்கோ சிப்ஸ் ஓட்ஸ் குக்கீ:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு வாங்கி சாப்பிட தூண்டும் சாக்லெட் சிப்ஸ் ஓட்ஸ் குக்கீ செய்முறை உங்களுக்காக...

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 3 கப்

வெண்ணெய் - 1 கப்

வால்நட் - 1 கப்

சாக்கோ சிப்ஸ் - 1 கப்

நாட்டுச்சர்க்கரை - 1 கப்

வெள்ளை சர்க்கரை - ½ கப்

முட்டைகள் - 2

வெண்ணிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்

மைதா மாவு - 1 1/4 கப்

பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

அவனை 325 டிகிரி பாரன்ஹீட்டிற்கு ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும்.

ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில், வெண்ணெய், நாட்டுச் சர்க்கரை மற்றும் வெள்ளை சர்க்கரை சேர்த்து, அது நன்றாக மென்மையாகும் வரை கலக்கவும்.

அந்த கலவையுடன் அடித்த முட்டை மற்றும் வெண்ணிலா எசன்ஸை கலக்கவும்.

மற்றொரு கிண்ணத்தில் மாவு, சமையல் சோடா மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

வேர்க்கடலை சேர்த்து இப்படியொரு தக்காளி சட்னி செஞ்சிருக்கீங்களா..? இரவு டிஃபனுக்கு டிரை பண்ணுங்க..!

அந்த மாவு கலவையை வெண்ணெய் மற்றும் சர்க்கரை அடங்கிய கலவையுடன் கலந்து நன்றாக மென்மையாகும் வரை கலக்குங்கள்.

அதில் ஓட்ஸ்,வால்நட் மற்றும் சாக்கோ சிப்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பேக்கிங் ட்ரே மீது பட்டர் பேப்பரை போட்டு, அதில் சிறிய கரண்டியில் எடுத்து ஒவ்வொன்றாக வைக்கவும்.

இப்போது, ​​அந்த ட்ரேயை 12 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில் வைக்கவும். சுட்டுக்கொள்ளவும். குக்கீகள் தயார் ஆனதும், அதனை சிறிது நேரத்திற்கு ஆர விட வேண்டும்.

3. ஓட்ஸ் இட்லி:

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் -1 கப்

ரவை- 1/2 கப்

தயிர் - 1/4 கப்

கேரட்- 1

பச்சை மிளகாய் - 2

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

கருவேப்பிலை -10

கொத்தமல்லி இலைகள் - ஒரு கையளவு

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

முந்திரிப் பருப்பு - 10

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

உப்பு - தேவையான அளவு

பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு கப் ஓட்ஸை 4 முதல் 5 நிமிடத்திற்கு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

சிறிது நேரம் கழித்து நன்றாக ஆறிய ஓட்ஸை மிக்ஸி ஜாரில் போட்டு, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை சேர்க்கவும். கடலைப்பருப்பு, மற்றும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ரவா சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

இப்பொழுது அரைத்து வைத்த ஓட்ஸை சேர்த்து ஒரு நிமிடம் தொடர்ந்து கிளறவும்.

காரசாரமான ரோட்டுக்கடை பூண்டு தோசை : முட்டை ஊத்தி செய்ய ரெசிபி..!

இந்த கலவையில் சூடு இறங்கியதும், ஒரு பாத்திரத்தில் தயிர், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, கேரட் மற்றும் உப்பு சேர்க்கவும். இட்லி மாவு பதத்திற்கு தேவையான தண்ணீரையும் சேர்த்து கலந்து கொள்ளவும். கெட்டியான இட்லி மாவில் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.

இப்பொழுது இட்லி தட்டில் எண்ணெய் தடவி தயாரித்துள்ள மாவை ஊற்றி 8 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்

top videos

    இந்த இட்லியை உங்களுக்கு பிடித்த சட்னி அல்லது சாம்பார் உடன் பறிமாறலாம்.

    First published:

    Tags: Food recipes, Oats